அந்த சம்பவம் அவரின் வாழ்க்கையை புரட்டி போட்டது ..! தினேஷ் கார்த்திக் ஓபன் டாக்..!
தினேஷ் கார்த்திக்: இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பரான தினேஷ் கார்த்திக் சமீபத்தில் ஐபிஎல் தொடரிலிருந்தும் ஓய்வை அறிவித்திருந்தார் என்பது நமக்கு தெரியும்.
மேலும், கடந்த 2022 ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 20 ஓவர் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்காக விக்கெட் கேப்பாராக அணியில் இடம்பெற்று விளையாடி இருந்தார் தினேஷ் கார்த்திக்.
இந்நிலையில், கடந்த 2022-ம் ஆண்டின் உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியிடம் தோல்வியடைந்த சம்பவம் ரோகித் சர்மாவின் வாழ்க்கையை மாற்றிவிட்டதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் தற்போது ஐசிசி (ICC) இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த ஒரு வீடியோவில் தெரிவித்துள்ளார்.
அவர் பேசிய போது, “2022 டி20 உலகக்கோப்பையில் இங்கிலாந்து அணியிடம் நாம் தோல்வி அடைந்த போது ரோகித் சர்மாவின் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை அது ஏற்படுத்தியது.
ஒரு பேட்ஸ்மேனாகவும், ஒரு கேப்டனாகவும் ரோகித் சர்மாவுக்கு அது திருப்பு முனையாகவே அமைந்தது என்றே சொல்லலாம். அந்த போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக சராசரிக்கும் குறைவாகவே ஸ்கோரையே பதிவு செய்திருந்தோம். அப்போது ரோகித் சர்மா ஒரு முடிவை எடுத்தார்.
டி20 கிரிக்கெட் போட்டியை விளையாடுவதற்கு இது சரியான முறையல்ல, நாம் மேலும் அதிரடியாக விளையாட வேண்டும். அன்று கூறியது முதல், தற்போது வரை ரோகித் சர்மா அதிரடியாக விளையாட வேண்டும், அட்டாக் செய்ய வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறார்.
கடந்த 2 ஐசிசி சர்வதேச தொடர்களிலும் இந்திய அணியின் ஆட்டம் ரசிகர்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. மேலும், இந்த டி20 உலகக்கோப்பையில் பேட்டிங்கில் அவர் விளையாடும் முறை புதிய அனுபவத்தை கொடுத்துள்ளது. அதிலும் முதல் பேட்டிங் என்றால் அனைவரும் ஆக்ரோஷமாக விளையாடுகிறார்கள்.
அது தான் இந்திய அணியின் மிகப்பெரிய மாற்றமாகும். இதே அணுகுமுறையை இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி சுற்றிலும் காட்ட வேண்டும்.
இந்த சூழலில் ஒரு தவறு செய்தாலும் கூட சொந்த ஊருக்கு விமானம் ஏற வேண்டியது தான் என்று அனைவருக்கும் நன்றாக தெரியும். அது தான் இந்திய அணிக்கு சவாலாக இருக்கப் போகிறது”, என்று கூறி இருந்தார்.