கோலியின் அந்த தைரியமான முடிவு! வெளிப்படையாக பகிர்ந்த இந்திய ஸ்பின்னர்!

Virat Kohli

சென்னை : இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலியின் டெஸ்ட் கேப்டன்ஸியில் தான் விளையாடிய அனுபவம் பற்றி இந்திய லெக் ஸ்பின்னரான கார்ன் ஷர்மா சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசி இருக்கிறார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி ஸ்பின்னர்களில் ஒருவர் தான் கார்ன் ஷர்மா. இவர், கடந்த 2014 மற்றும் 2015-ம் ஆண்டில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்திய அணிக்காக முதல் முறை விளையாடினார். இந்த தொடர் தான் அவருக்கு முதல் டெஸ்ட் தொடராகும். மேலும், வருடம் தோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் தற்போது பெங்களூரு அணிக்காக விளையாடியும் வருகிறார்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக தனது முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியை கார்ன் சர்மா விளையாடினார். அப்போது நடைபெற்ற இந்த பார்டர் கவாஸ்கர் ட்ராபி தொடருக்கு இந்திய அணியின் கேப்டனான எம்.எஸ்.தோனி தலைமை தாங்கவில்லை. அவருக்கு கட்டை விரலில் காயம் ஏற்பட்டிருந்த காரணத்தால் விராட் கோலி இந்திய அணியை கேப்டனாக முதல் முறை தலைமை தாங்கினார்.

இந்த தொடரில் ஏற்பட்ட அனுபவத்தை பற்றியும், விராட் கோலி கேப்டனாக எடுத்த அந்த முடிவை பற்றியும் தற்போது இவர் ஒரு யூடுயூப் சேனலுக்கு கொடுத்த பேட்டியில் பேசி இருக்கிறார். இது குறித்து பேசிய அவர், “ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் தான் நான் அறிமுகமானேன். ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக அறிமுகமாவதே சிறப்பான ஒன்றாகும். மிகச் சிலருக்கே அந்த மாதிரியான அறிமுகத்தை பெறுகிறார்கள்.

அந்த போட்டியில் நாங்கள் 300 ரன்களுக்கு மேல் சேஸ் செய்ய வேண்டி இருந்தது. அப்போது விராட் கோலி, ‘ட்ரா செய்ய கூடாது, சேஸ் செய்ய வேண்டும்’ என்று கூறினார், இது டிரஸ்ஸிங் அறையில் உள்ள வீரர்களுக்கு உத்வேகமாக அமைந்தது” என்று கூறினார். இது போல நிலைமையில் முடிந்த அளவுக்கு ட்ரா செய்யவே ஒரு அணியின் கேப்டன் பார்ப்பார். ஆனால் விராட் கோலியின் இந்த தையிரியமான முடிவு வீரர்களுக்கு உத்வேகம் கொடுத்ததாக கார்ன் சர்மா கூறினார்.

இது பற்றி மேலும் பேசிய கார்ன் சர்மா,”இது ஒரு வித்தியாசமான தையிரியமான முடிவு. ஒவ்வொரு கேப்டனின் அணுகுமுறையும் வேறுபட்டது தான், ஆனால், இது போல நாங்கள் ஒரு டெஸ்டின் 4-வது இன்னிங்ஸில் 300 ரன்களுக்கு மேல் இலக்கை துரத்த வேண்டும் என்று அவர் கூறினார். இது ஆஸ்திரேலிய நிலைமைகளில் மிகவும் கடினமாக இருந்தலாலும், சக வீரர்களுக்கு ஒரு அற்புதமான உத்வேகத்தை கொடுத்தது”, என்று கார்ன் சர்மா கூறி இருக்கிறார்.

அதனைத் தொடர்ந்து நடந்த அந்த போட்டியில் இந்திய அணி கடுமையாக விளையாடினாலும், அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் அந்த போட்டியை 48 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது. அதே போட்டியில் அதிரடி  வீரரான விராட் கோலி 175 பந்துக்கு 141 ரன்கள் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்