SRH vs CSK Post Match Interview Abhishek Sharma [IMAGE SOURCE : JIO CINEMA]
ஐபிஎல் 2024: சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் ஆட்டநாயகன் விருது பெற்ற அபிஷேக் ஷர்மா யுவராஜ், லாராவுக்கு நன்றி தெரிவித்தார்.
ஐபிஎல் தொடரை நேற்றைய போட்டியில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஹைதராபாத் அணியும், ருத்ராஜ் தலைமையிலான சென்னை அணியும் மோதியது. ஹைதராபாத் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது.
இதன்பின் களமிறங்கிய ஐதராபாத் அணி 18.1 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய ஹைதராபாத் அணியின் பந்து வீச்சளர்கள் இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தனர்.
அதுமட்டுமில்லாமல், அதிரடியாக விளையாடிய ஐதராபாத் அணியின் வீரர் அபிஷேக் ஷர்மா 12 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தனர். இவர் தான் இந்த போட்டியின் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இதன்பின் அபிஷேக் ஷர்மா கூறியதாவது, முதலில் பந்துவீச வந்தபோதே பிட்ச் மெதுவாக இருந்ததை நாங்கள் உணர்ந்தோம்.
இதனால் முதல் 6 ஓவரில் அதாவது பவர் பிளேவில் அதிரடியாக விளையாடினால் போட்டியை எங்கள் பக்கம் கொண்டுவந்துவிடலாம் என தெரியும். இதன் காரணமாகவே நான் சற்று அதிரடியாக விளையாடினேன். இதற்கான எனது அப்பா, யுவராஜ் சிங் மற்றும் பிரையன் லாரா ஆகியோருக்கு ஸ்பெஷல் நன்றி தெரிவிக்கிறேன். இந்த போட்டியின் மூலம் எங்களுக்கு ஒரு நல்ல அனுபவமும் கிடைத்தது என கூறினார்.
சென்னை : இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள "குட் பேட் அக்லி" திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி…
சென்னை : நடிகர் கமல்ஹாசனுக்கு சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) ஒரு முக்கியமான எச்சரிக்கை அறிவிப்பை…
மதுரை : மதுரை மாவட்டம் கள்ளபட்டியைச் சேர்ந்த முத்துக்குமார் உசிலம்பட்டி காவல் நிலையத்தில் முதல் நிலைக் காவலராகவும், காவல் ஆய்வாளரின்…
சென்னை : ஐபிஎல்-ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான நேற்றைய போட்டியில், பெங்களூரு…
பாங்காக் : மியான்மர் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பெரும் உயிர்ச் சேதம் ஏற்பட்டது. இந்நிலையில் நிலநடுக்கத்தால்…
சென்னை : தமிழ்நாட்டில் இன்னும் ஒரு வருடத்தில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளது. அதற்குள் தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் யாராக இருப்பார்கள்…