“எங்களை பெற்றோர்களாக தேர்வு செய்ததற்கு நன்றி லட்டு”- மகள் குறித்து உருக்கமாக பதிவிட்ட நடராஜன்!
இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சாளர் நடராஜன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மனைவி மற்றும் மகளுடன் இருக்கும் படத்தை பதிவிட்டுள்ளார்.
டி.என்.பி.எல். தொடரில் அறிமுகமாகி, ஐபிஎல் தொடரில் தனது அற்புதமான ஆட்டத்தில் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம்பிடித்தவர், தமிழக வீரர் நடராஜன். ஐபிஎல் தொடரின் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் விளையாடி, தனது அற்புதமான பந்துவீச்சால் ஆஸ்திரேலியா தொடரில் இடம்பெற்றார். டி-20, ஒருநாள், டெஸ்ட் என அனைத்து தொடரிலும் தனது அற்புதமான யாக்கரால் பல விக்கெட்களை வீழ்த்தி, தமிழக மக்கள் மத்தியில் நீங்காத இடம்பிடித்தார்.
இந்நிலையில் நடராஜன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மனைவி மற்றும் மகளுடன் இருக்கும் படத்தை பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், “எங்களின் குட்டி தேவதை ஹன்விகா. நீ எங்கள் வாழ்க்கையில் கிடைத்தது, ரொம்ப அழகான பரிசு. எங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையவும் நீ தான் காரணம். எங்களை உன் பெற்றோராக தேர்ந்தெடுத்ததற்கு நன்றி லட்டு. நாங்கள் எப்போதும் உன்னை நேசித்துக் கொண்டே இருப்போம்” என உருக்கமாக பதிவிட்டுள்ளார். தற்பொழுது அந்த பதிவு, இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் நடராஜன், இங்கிலாந்து அணிக்கு எதிரான டி-20 தொடரில் இடம் பெற்றுள்ளார். இதனால் அவரின் ஆட்டத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
View this post on Instagram