மயங்கி கிடந்த பறவையை காப்பாற்றி “காப்பர்ஸ்மித்” என்ற பெயரை வைத்த தல தோனி குடும்பம்.!
இந்திய கிரிக்கெட் வீரர் தோனி தனது தோட்டத்தில் மயங்கி கிடந்த பறவையை காப்பாற்றியுள்ளார்.
கொரனோ வைரஸ் காரணமாக உலகம் முழுவதும், ஊரடங்கு பிறப்பிக்கப்படுள்ள நிலையில் மேலும் பலரும் வீட்டிலே முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் படங்களின் படப்பிடிப்புகள் மற்றும் கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது, மேலும் இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணி வீரர் தல தோனி மகள் ஜிவா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், எங்கள் வீட்டு தோட்டத்தில் ஒரு பறவை மயங்கி கிடந்ததை பார்த்தேன் உடனடியாக நா என்னுடைய அப்பாவிடம் கூறினேன், என்னுடைய அப்பா அந்த பறவையை கையில் எடுத்தார், அதற்கு பிறகு குடிக்க தண்ணீர் கொடுத்தார், சிறிது நேரத்தில் அந்த பறவை கண் திறந்தது இதைக்கண்டு நாங்கள் மகிழ்ச்சி அடைந்தோம், அதன் பிறகு ஒரு கூடையில் இலைகளை தூவி அந்த பறவைக்கு “காப்பர்ஸ்மித் ” என்று ஒரு பெயரை எனது அம்மா கூறினார்,
அடுத்ததாக சிறிது நேரம் கழித்து அந்த பறவை திடீரென பறந்து சென்றது, அதற்கு என்னுடைய அம்மா அந்த பறவை என்னுடன் இருக்கும் என்று கூறியதாக ஜிவா பதிவுசெய்துள்ளார், மீண்டும் அந்த பறவையை நான் பார்ப்பேன் என்று நம்பிக்கையுடன் இருக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.