சிட்னி மைதானத்தில் நடராஜனை வாழ்த்தும் தல ரசிகர்கள்..!

Default Image

இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகளை கொண்ட டி-20 தொடரில் விளையாடி வருகிறது. கடைசியாக நடைபெற்ற 2 போட்டிகளில் இந்திய அணி வெற்றிபெற்றது. இதனால், இந்திய அணி 3-0 கணக்கில் தொடரை கைப்பற்றியது.

இன்று மூன்றாவது போட்டி சிட்னியில் நடைபெறுகிறது. போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச முடிவு செய்துள்ளது. இந்நிலையில், இன்றைய போட்டியில் நடிகர் அஜித் ரசிகர்கள் போஸ்டர் ஒன்றை மைதானத்தில் எடுத்துச் சென்று தமிழக வீரர் நடராஜருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும், ட்விட்டரில் #ThalaFansWishesNATARAJAN என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது. நடராஜன் முதல்முறையாக கடைசியாக நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டி மூலம் தனது முதல் சர்வதேச போட்டியை தொடங்கினார். அப்போது அவர் களமிறங்கிய முதல் போட்டியிலேயே 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற 2 டி20 போட்டியிலும் நடராஜன் இறங்கினார். அதில், முதல் போட்டியில் நடராஜன் 4 ஓவர்கள் வீசி 30 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

2வது போட்டியில் நடராஜன் 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்நிலையில் நடராஜன் களமிறங்கிய 3 சர்வதேச போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்