தல தோனி அடுத்த வருஷமும் விளையாடுவார்…சென்னை அணியின் சி.இ.ஓ. காசி விஸ்வநாதன் தகவல்.!!

ms dhoni CSK

தோனி அடுத்த வருஷமும் விளையாடுவார் என்று  எங்களுக்கு நம்பிக்கை இருக்கு என சென்னை அணியின் சி.இ.ஓ. காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். 

16-வது ஐபிஎல் சீசன் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதியது. இதில் கொல்கத்தா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மேலும், நேற்று நடைபெற்ற போட்டி சென்னை அணிக்கு இந்த சீசனில்  கடைசி ஆட்டம் என்பதால், மைதானத்தில் ரசிகர்கள் வீரர்களை வரவேற்க காத்திருந்தனர். போட்டி முடிந்த பிறகு, சென்னை வீரர்கள் சேப்பாக்கத்திற்கு மரியாதை செலுத்தும் வகையில், மைதானத்தை சுற்றி வலம்வந்தனர். கிப்ட் களையும் தூக்கி ரசிகர்களுக்கு வீசினார்கள்.

போட்டி முடிந்த பிறகு  பேசிய சென்னை அணியின் சி.இ.ஓ. காசி விஸ்வநாதன் தோனி அடுத்த வருடம் ஐபிஎல் போட்டியிலும் விளையாடுவார் என்று  எங்களுக்கு நம்பிக்கை இருக்கு. எனவே ரசிகர்கள் யாரும் வருத்தப்படவேண்டாம். எப்போதும் எங்களுக்கு ஆதரவு தாருங்கள்” என தெரிவித்துள்ளார்.

தோனி அடுத்த சீசனும் விளையாடுவார் என்ற நம்பிக்கை இருப்பதாக சென்னை அணியின் சி.இ.ஓ. காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளதால் ரசிகர்கள் சற்று உற்சாகத்தில் உள்ளார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்