20 வருடத்திற்கு பிறகு பூர்விக கிராமத்தை விசிட் செய்த தல தோனி..!

கேப்டன் கூல் மகேந்திர சிங் தோனி  சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் நேரத்தை அனுபவித்து வருகிறார். உத்தரகாண்டில் உள்ள தனது பூர்வீக கிராமத்திற்கு நேற்று முன்தினம் சென்றார். அவருடன் அவரது மனைவி சாக்ஷி தோனியும் வந்திருந்தார். இருவரும் கிராமத்திற்குச் சென்று பெரியவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நேற்று முன்தினம் தோனியும் அவரது மனைவி சாக்ஷியும் காலை 10.45 மணியளவில் அவரது கிராமமான ல்வாலியை அடைந்தனர். அங்கு அவருக்கு பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்பட்டது.  உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணி வெற்றிபெற வேண்டி அங்குள்ள பல்வேறு கோவில்களில் சாமி தரிசனம் செய்தார் என கூறப்படுகிறது.

தோனிடம் இருந்து கிரிக்கெட் வித்தைகளைக் கற்றுக்கொள்ள ஆர்வமாக இருந்த கிராமத்து இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கு கிரிக்கெட் டிப்ஸ் வழங்கினார்.  கிராமத்தில் சுமார் இரண்டரை மணி நேரம் இருந்தார். பின்னர் மதியம் 1.15 மணியளவில் அவர் கிராமத்தை விட்டு வெளியேறினார். தோனியின் கிராமமான ல்வாலி இன்னும் சாலைகள் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் தவித்து வருகிறது. தோனி அங்கு காரில் வந்த பிறகு நடைபாதை வழியாக கிராமத்தை அடைந்தார்.

இதற்கு முன் கடந்த 2003 ஆம் ஆண்டு   சொந்த கிராமத்திற்கு  சென்று வந்தார். தோனியின் தந்தை பான் சிங் தோனி சுமார் 45 ஆண்டுகளுக்கு முன்பு தனது சொந்த கிராமத்தை விட்டு வெளியேறி ராஞ்சியில் குடியேறினார்.  மகேந்திர சிங் தோனியின் உறவினர்கள் இன்னும் இந்த கிராமத்தில் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்