தல தோனி மாஸ் என்ட்ரி; அதிர்ந்த சேப்பாக்கம் அரங்கம்.!
சேப்பாக்கத்தில் நடைபெறும் சிஎஸ்கே அணியின் பயிற்சி ஆட்டத்தை பார்க்கவந்த ரசிகர்கள், தோனிக்கு அரங்கம் அதிர வரவேற்பு கொடுத்தனர்.
இந்தியாவின் மிகப்பெரும் கிரிக்கெட் தொடரான ஐபிஎல் கிரிக்கெட்டின் 16 வது சீசன் வரும் மார்ச் 31 ஆம் தேதி தொடங்குகிறது. நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடருக்காக அனைத்து அணி வீரர்களும் தங்களது அணியில் இணைந்து பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி உட்பட சென்னை அணி வீரர்கள், சென்னை சேப்பாக்கத்தில் பயிற்சி செய்து வருகின்றனர். இந்த நிலையில் அணி வீரர்களுக்கிடையில் நடந்த பயிற்சி ஆட்டத்தில், கேப்டன் தோனி மைதானத்திற்கு உள்ளே வரும் வீடீயோவை அணி நிர்வாகம் இணையத்தில் வெளியிட்டுள்ளது.
அப்போது அரங்கமே அதிரும் வகையில், “தோனி தோனி…” என அவரது பெயரை ரசிகர்கள் முழக்கமிட்டு, ஆரவார வரவேற்பை வழங்கினர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சிஎஸ்கே தனது முதல் போட்டியில் மார்ச் 31இல் குஜராத் அணிக்கு எதிராக களமிறங்குகிறது.<
Nayagan meendum varaar… ????????#WhistlePodu #Anbuden ???? pic.twitter.com/3wQb1Zxppe
— Chennai Super Kings (@ChennaiIPL) March 27, 2023
/p>