இந்த ஐபிஎல் தொடரில் ‘தல தோனி’? ரசிகர்களுக்கு காத்திருக்கும் அந்த ‘சர்ப்ரைஸ்’!

MS Dhoni - CSK

சென்னை : ஐபிஎல் தொடரில் நட்சத்திர அணியாக திகழும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான எம்,எஸ்.தோனி இந்த ஐபிஎல் தொடரில் அன்கேப்ட் ‘UNCAPPED’ வீரராக தோனி சென்னை அணிக்காக விளையாடவுள்ளார் என ஒரு தகவல் பரவி வருகிறது.

நடப்பாண்டு ஐபிஎல் தொடர் முடிவடைந்ததில் இருந்து அடுத்த ஐபிஎல் தொடருக்கான எதிர்பார்ப்பு என்பது எகிறி விட்டது. அதற்கு காரணம் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்காக நடைபெற இருக்கும் ‘மெகா ஏலம்’ தான். 5 வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த மெகா ஏலத்திற்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு என்பது வழக்கத்திற்கு மாறாக சற்று அதிகமாகவே இருக்கும்.

UNCAPPED வீரராக தோனி..?

இந்த ஆண்டு நடைபெற இருக்கும் இந்த மெகா ஏலத்திற்கான கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. அதில், ஒரு அணி 4 வீரர்களை தக்க வைத்து கொள்ளலாம் என்ற விதியை மாற்றி 6 முதல் 7 வீரர்கள் வரை தக்கவைத்து கொள்ளலாம் எனும் புதிய விதியை கொண்டு வருமாறு பெரும்பலான அணிகள் பிசிசிஐக்கு கோரிக்கை வைத்தனர். மேலும், அந்த கூட்டத்தில் சிஎஸ்கே அணி மட்டும் “அன்கேப்ட் பிளேயர்” விதியை மீண்டும் கொண்டு வரவேண்டும் என அந்த கூட்டத்தில் கோரிக்கை வைத்ததாக ஒரு தகவல் வெளிவந்தது.

இப்படி “அன்கேப்ட் பிளேயர்” விதி மீண்டும் வந்தால், சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரரான எம்.எஸ்.தோனியை “அன்கேப்ட் பிளேயராக” ஏலத்தில் வைக்கலாம் என கூறுகிறார்கள். இதனால், ‘தோனி போன்ற வீரரை குறைந்த விலைக்கு ஏலத்தில் எடுப்பதுடன் மற்றும் ஒரு நல்ல தொகைக்கு அணியின் எதிர்காலத்தை கணக்கில் வைத்து ஒரு இளம் வீரரை எடுப்பதற்கு வசதியாகவும் இருக்கும்.’ என சிஎஸ்கே அணி ஒரு திட்டம் தீட்டுவதாக ஒரு தகவல் பரவி வந்தது.

பிசிசிஐயின் UNCAPPED விதி..!

ஒரு வீரர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஓய்வு பெற்று 5 வருடங்களை கடந்து விட்டால் அவரை ‘அன்கேப்ட் வீரராக’ கருதலாம். மேலும், அதன் அடிப்படையில் அவரை நடைபெறும் மெகா ஏலத்தில் குறைந்தபட்ச விலையான வெறும் 20 லட்சத்திற்கு கூட வைக்க முடியும் என்ற விதியை பிசிசிஐ ஆரம்பத்தில் அறிமுகப்படுத்தியது.

இது கடந்த 2021-ம் ஆண்டு வரையில் ஐபிஎல் தொடரில் நடைமுறையில் இருந்து வந்தது. அதன்பிறகு 2021-ம் ஆண்டு பிசிசிஐ இந்த விதியை கைவிட்டது. தற்போது இந்த விதியை தான் மீண்டும் அமல்படுத்த வேண்டும் என் சிஎஸ்கே கேட்டுக் கொண்டதாக ஒரு தகவல் பரவி வந்தது.

CEO காசி விஸ்வநாதன் பேட்டி ..!

இது போன்ற பல தகவல் பரவி வந்த நிலையில சிஎஸ்கே சிஈஓ(CEO) காசி விஸ்வநாதன் டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில், நாங்கள் “அன்கேப்ட்” விதியை கேட்டகவில்லை எனவும் பிசிசிஐ தான் எங்களுக்கு அந்த விதியை பரிந்துரை செய்தார்கள் எனவும் கூறி இருக்கிறார். இது குறித்து பேசியஅவர், “இது குறித்து எனக்கு எந்த ஐடியாவும் இல்லை.

நாங்கள் அந்த விதியை கேட்கவும் இல்லை. பிசிசிஐ தான் தாங்களாக முன்வந்து எங்களிடம் ‘அன்கேப்ட் பிளேயர்’ விதி இருக்கிறது எனவும் வேண்டுமானால் அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறினார்கள். ஆனால், பிசிசிஐ இன்னும் அதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை” என அந்த பேட்டியில் பேசிய அவர் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Election Result
Minister Sekarbabu
Priyanka Gandhi
AUS vs IND , KL Rahul - Jaiswal
amaran ott
Congress - TMC - BJP
Annamalai (14) (1)