200-வது சிக்ஸர் அடித்து அரங்கை அதிர வைத்த தல தோனி; மாஸ் வீடியோ .!
ஐபிஎல் 2023 தொடரின் முதல் போட்டியில், குஜராத் அணிக்கெதிரான அடித்த சிக்ஸ் மூலம் தோனி சிஎஸ்கே விற்காக 200 சிக்ஸர்களை அடித்துள்ளார்.
ஐபிஎல் 2023 தொடர் நேற்று குஜராத் அகமதாபாத் ஸ்டேடியத்தில் பிரமாண்டமாக கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. டாஸ் வென்ற குஜராத் முதலில் பந்துவீசியது. இதன்படி முதலில் களமிறங்கிய சிஎஸ்கே அணி முதல் இன்னிங்சில் ருதுராஜின்(92 ரன்கள்) அதிரடியால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் குவித்தது.
இரண்டாவதாக பேட்டிங் செய்த குஜராத் அணி 19.2 வர்கள் முடிவில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரின் முதல் வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டியில் சிஎஸ்கே அணியின் பேட்டிங்கின் போது கடைசி ஓவரில் தோனி அடித்த சிக்ஸர், ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக 200 சிக்சர்களை அடித்த முதல் வீரர் என்ற பெருமையை தோனி படைத்துள்ளார்.
இதற்கு முன்னதாக ஒரு அணிக்காக 200 சிக்சர்களை அடித்த வீரர்களில் கிறிஸ் கெயில் 239 சிக்ஸர்கள்(RCB), டி வில்லியர்ஸ் 238 சிக்ஸர்கள்(RCB), பொல்லார்ட் 223 சிக்ஸர்கள்(MI), விராட் கோலி 218 சிக்ஸர்கள்(RCB) ஆகியோர் இந்த வரிசையில் முன்னிலையில் இருக்கின்றனர்.
????Kar diya bhai! Check out Thala’s 200th six for #CSK ????#IPLonJioCinema #CSKvGT #TATAIPL https://t.co/eMKI8D3FXG pic.twitter.com/BeuUyBEBlf
— JioCinema (@JioCinema) March 31, 2023