அரங்கம் அதிர மைதானத்தில் நுழைந்த ‘தல தோனி’.! விராட் கோலி மனைவி கூறிய அந்த வார்த்தை.!
நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் பெங்களூரு சின்ன சாமி மைதானத்தில் மோதியது. இந்த போட்டியை நேரில் கண்டு ரசிக்க விராட் கோலியின் மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மா வருகை தந்திருந்தார்.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிரடியாக விளையாடியது. இறுதியாக கடைசி ஓவரில் இரண்டு பந்துகள் மட்டுமே மீதமிருந்த நிலையில், சென்னை அணி கேப்டன் தோனி அரங்கம் அதிர மைதானத்தில் நுழைந்தார்.
அப்பொழுது ரசிகர்கள் அனைவரும் தோனி…தோனி என கரகோஷமிட்டனர். தோனி உள்ளே நுழைந்ததை பார்த்த விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா “அவர்கள் அவரை நேசிக்கிறார்கள்” ( They Love Him ) என கூறியுள்ளனர். அவர் பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Anushka Sharma on #MSDhoni while he was walking in during #CSKVSRCB
” They Love Him ” pic.twitter.com/QoCUZOB26R— Anupam Choudhary (@Akkaler) April 17, 2023
மேலும், நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் சென்னை அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்கள் முடிவில் 226 ரன்கள் குவித்தது. அடுத்ததாக களமிறங்கிய பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 218 ரன்கள் எடுத்து. இதன் மூலம் சென்னை அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.