‘தயாரா இரு ..’ முன்கூட்டியே ஹின்ட் கொடுத்த ‘தல’ தோனி ..!
IPL 2024 : ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் இன்று இரவு 8 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வைத்த தொடங்கவுள்ளது. சென்னை, பெங்களூரு இடையே நடக்கவுள்ள இந்த போட்டியானது மிக பெரும் எதிர்பார்ப்புடன் இருந்து வருகிறது. குறிப்பாக சென்னை அணி ரசிகர்கள் ‘தல’ தோனி எப்படி விளையாட போகிறார், எந்த விக்கெட்டிற்கு விளையாட போகிறார் என்று கடும் எதிர்பார்ப்பில் இருந்து வரும் அதே வேலையில் சென்னை அணியின் புதிய கேப்டன் ஆன ருதுராஜ் கெய்வாட் எப்படி சென்னை அணியை கொண்டு செல்ல போகிறார் என்ற எதிர்பார்ப்பிலும் இருந்து வருகின்றனர்.
Read More :- எங்களுக்கே தெரியாதுங்க..’எல்லாம் தோனி முடிவு தான்’ ! சிஸ்கே CEO காசி விஸ்வநாதன் பேச்சு!
இந்நிலையில் இன்று, ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ள வீடியோவில் சென்னை அணியின் எதிர்பாராத கேப்டன் மாற்றம் குறித்து சிஎஸ்கே அணியின் புதிய கேப்டன் ஆன ருதுராஜ் கெய்வாட் பேசி இருந்தார். அவர் கூறுகையில், “நான் அணியில் புதிதாக எதையும் மாற்ற வேண்டும் என நினைக்கவில்லை. கடந்த 2023-ம் ஆண்டு ஐபிஎல் தொடரின் போதே தோனி எங்களுக்கு அடுத்த வருட சென்னை அணியின் கேப்டன் குறித்தும் ஐபிஎல் தொடர் குறித்தும் ‘எல்லாவற்றிக்கும் தயாரா இரு’ என்று இது போன்ற ஹின்ட்ஸ்களை (Hints) அவ்வப்போது கொடுத்தார்.
Read More :- ருதுராஜிக்கு கேப்டன் பதவி கொடுத்ததில் ஆச்சிரியம் இல்லை… ரவிச்சந்திரன் அஸ்வின்!
கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் பேஸ்புக்கில் ‘நியூ ரோல்’ (New Role) பற்றி குறிப்பிட்டியிருந்தார். அதன் விளைவாக என்னை சுற்றி உள்ளவர்கள் அனைவரும் நீ தான் அடுத்த சென்னை கேப்டானா என்று கேள்வி எழுப்பினார்கள். நானும் அவர் வேறு ஏதோ செய்யப்போகிறார் என்று எதிர்பார்த்தேன். ஆனால், இந்த ஆண்டு பயிற்சி முகாமிற்கு அவர் வந்தவுடன் என்னை தனியாக சில பயிற்சி போட்டிகளில் ஈடு பட வைத்தார்.
Read More :- CSKvsRCB : எதிர்பார்க்கப்படும் பிளேயிங் லெவன்! இப்படி இருந்த சூப்பர் தான் ..!
மேலும், அவர் என்னை சென்னை அணியின் கேப்டனாக இருக்க முடிவு செய்து விட்டார். அதனால் தான் நான் இன்று இங்கு இருக்கிறேன் மற்றும் வருகிற ஐபிஎல் போட்டிகளை எதிர்த்து காத்து கொண்டிருக்கிறேன்”, என்று ஐபிஎல் நிறுவனம் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசி இருந்தார். மேலும், ருதுராஜ் நடைபெறும் போகும் போட்டியை குறித்தும், ஆர்சிபி அணியினை கேப்டன் டு பிளெசிஸ் குறித்தும் பேசி இருந்தார்.
.@ChennaiIPL fans, meet your new Captain! ????
The newly appointed #CSK skipper, Ruturaj Gaikwad, shares what this new opportunity means to him ???? – By @RajalArora#TATAIPL | #CSKvRCB pic.twitter.com/PS1qfGH2n9
— IndianPremierLeague (@IPL) March 22, 2024