மிரட்டலாக பவுண்டரியை தடுத்த தாய்லாந்து சிங்க பெண் நட்டகன் சந்தம்..!
நேற்று பெண்கள் டி 20 இறுதி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் சூப்பர்நோவாஸ் மற்றும் டிரெயில் ப்ளேஸர்ஸ் ஆகிய இரு அணிகளும் மோதியது. முதலில் பேட் செய்த டிரெயில் ப்ளேஸர்ஸ் அணி 119 ரன்கள் இலக்கை சூப்பர்நோவாஸ் அணிக்கு வைத்தது.
பின்னர், சூப்பர்நோவா அணி இறங்கியது. இரண்டாவது ஓவரை டிரெயில் ப்ளேஸர்ஸ் அணியின் எக்லெஸ்டோன் வீசினார். அப்போது, இரண்டாவது ஓவரின் முதல் பந்தை ஜெமிமா பவுண்டரிக்கு அடித்தார்.
WT20: கோப்பையை கைப்பற்றிய ஸ்மிருதி மந்தனா படை..!
எல்லோருக்கும் பந்து பவுண்டரி சென்று விடும் என எதிர்ப்பார்த்த நிலையில், தாய்லாந்து வீராங்கனை நட்டகன் சந்தம் ஓடி வந்து பந்துக்கு முன்னால் டைவ் அடித்து பந்து பவுண்டரிக்கு செல்லாமல் தடுத்தார்.
அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இப்போட்டியில் சூப்பர் நோவாஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 102 ரன்கள் எடுத்து 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதனால், டிரெயில் ப்ளேஸர்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியது.
MUST WATCH – Dive like Chantham
Chased the ball, never gave-up and dived just in the nick of time to save a certain boundary. Top-class fielding from Nattakan Chantham.
WATCH ????https://t.co/eBIXoosnr2 #JioWomensT20Challenge pic.twitter.com/vjkYlI49xl
— IndianPremierLeague (@IPL) November 9, 2020