ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் தோல்விக்கு பிறகு விராட் கோலி தனது இன்ஸ்டாவில் ஸ்டோரி பதிவிட்டுள்ளார்.
இந்திய அணி இன்று நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் இரண்டாவது முறையாக தோல்வியடைந்து கோப்பையை பெரும் வாய்ப்பை நழுவவிட்டது. ஆஸ்திரேலிய அணி, 209 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வென்று முதன்முறையாக உலக டெஸ்ட் சாம்பியன் மேஸ்(Mace) பட்டத்தை கைப்பற்றியது.
மேலும் ஆஸ்திரேலிய அணி இந்த வெற்றியின் மூலம் ஐசிசியின் 4 விதமான கோப்பைகளையும்(ஒரு நாள், சாம்பியன்ஸ் டிராபி, டி-20 மற்றும் டெஸ்ட்) வென்ற முதல் அணி என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளது. இந்திய அணி கடந்த 2013இல் சாம்பியன்ஸ் ட்ராபி வென்றதன் பின் ஐசிசி தொடர்களில் தோற்பது வாடிக்கையாக நடந்து வருகிறது.
இந்த தோல்விக்கு பிறகு விராட் கோலி, தனது இன்ஸ்டாவில் ஸ்டோரி ஒன்றை பதிவிட்டுள்ளார். பெரும் பலத்தை நீ அடைய வேண்டுமானால் அமைதி தான் அதற்கு ஆதாரம் என்று தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் ஸ்டோரியை பதிவிட்டுள்ளார். விராட் கோலி இந்த போட்டியில் இந்திய அணியை வெற்றிக்கு அழைத்து செல்வார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் அவர் 49 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
விராட் கோலி தலைமையில் இந்திய அணி கடந்த முறையும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் நியூசிலாந்து அணியிடம் தோல்வி அடைந்திருந்தது. அதேபோல் இந்த முறையும் இறுதிப்போட்டி வரை வந்த இந்திய அணியால் கோப்பையை வெல்ல முடியவில்லை, இதனால் ரசிகர்கள் பலரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் தனது மனைவி துர்கா ஸ்டாலின் உடன் பொங்கல்…
இந்தியாவில் நடைபெறும் மகா கும்பமேளாவின் முக்கியத்துவம் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :12…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 2 நாட்கள் நடைபெறும் பெண்கல்வி குறித்த மாநாடு தொடங்கியுள்ளது. இஸ்லாமிய நாடுகளில் உள்ள…
தினமும் தலைக்கு எண்ணெய் தேய்த்தால் முடி வளருமா என்றும், எண்ணெய் வைக்கவில்லை என்றால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றியும் இந்தச்செய்தி குறிப்பில்…
சென்னை :பாரம்பரிய மிக்க சுவையில் பொங்கல் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி=…
துபாய் : நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டுள்ளவர். தற்போது துபாயில்…