டெஸ்ட் சாம்பியன்ஷிப் தோல்வி… விராட் கோலி பதிவிட்ட இன்ஸ்டா ஸ்டோரி என்ன தெரியுமா.!

ViratKohli WTC f

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் தோல்விக்கு பிறகு விராட் கோலி தனது இன்ஸ்டாவில் ஸ்டோரி பதிவிட்டுள்ளார்.

இந்திய அணி இன்று நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் இரண்டாவது முறையாக தோல்வியடைந்து கோப்பையை பெரும் வாய்ப்பை நழுவவிட்டது. ஆஸ்திரேலிய அணி, 209 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வென்று முதன்முறையாக உலக டெஸ்ட் சாம்பியன் மேஸ்(Mace)  பட்டத்தை கைப்பற்றியது.

மேலும் ஆஸ்திரேலிய அணி இந்த வெற்றியின் மூலம் ஐசிசியின் 4 விதமான கோப்பைகளையும்(ஒரு நாள், சாம்பியன்ஸ் டிராபி, டி-20 மற்றும் டெஸ்ட்) வென்ற முதல் அணி என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளது. இந்திய அணி கடந்த 2013இல் சாம்பியன்ஸ் ட்ராபி வென்றதன் பின் ஐசிசி தொடர்களில் தோற்பது வாடிக்கையாக நடந்து வருகிறது.

இந்த தோல்விக்கு பிறகு விராட் கோலி, தனது இன்ஸ்டாவில் ஸ்டோரி ஒன்றை பதிவிட்டுள்ளார். பெரும் பலத்தை நீ அடைய வேண்டுமானால் அமைதி தான் அதற்கு ஆதாரம் என்று தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் ஸ்டோரியை பதிவிட்டுள்ளார். விராட் கோலி இந்த போட்டியில் இந்திய அணியை வெற்றிக்கு அழைத்து செல்வார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் அவர் 49 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.

Virat story
Virat story [Image- Insta/@ViratKohli]

விராட் கோலி தலைமையில் இந்திய அணி கடந்த முறையும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் நியூசிலாந்து அணியிடம் தோல்வி அடைந்திருந்தது. அதேபோல் இந்த முறையும் இறுதிப்போட்டி வரை வந்த இந்திய அணியால் கோப்பையை வெல்ல முடியவில்லை, இதனால் ரசிகர்கள் பலரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்