ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணி அறிவிப்பு.!

Default Image

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3,4-வது டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் 4 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்தியா 2 போட்டிகளில் வென்று 2-0 என்ற கணக்கில் பார்டர்-கவாஸ்கர் கோப்பையை தக்கவைத்துள்ளது.

நாக்பூரில் நடந்த முதல் டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்யாசத்திலும், நேற்று டெல்லியில் நடந்து முடிந்த இரண்டாவது டெஸ்டில் 6 விக்கெட் வித்யாசத்திலும் இந்தியா மாபெரும் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் மீதமுள்ள 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

டெஸ்ட் அணி: ரோஹித் ஷர்மா (C), கேஎல் ராகுல், எஸ் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, கேஎஸ் பாரத் (W), இஷான் கிஷன் (W), ஆர்.அஷ்வின், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஆர்.ஜடேஜா, முகமது ஷமி, முகமது சிராஜ், ஷ்ரேயாஸ் ஐயர் , சூர்யகுமார் யாதவ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனத்கட்

இதேபோல் டெஸ்ட் தொடர் முடிந்து மார்ச் 17இல் தொடங்கும் மூன்று ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியும் பிசிசிஐ அறிவித்துள்ளது.

ஒருநாள் அணி: ரோஹித் சர்மா (C), எஸ் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், கேஎல் ராகுல், இஷான் கிஷன் (W), ஹர்திக் பாண்டியா (VC), ஆர் ஜடேஜா, குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், சாஹல், முகமது ஷமி, முகமது சிராஜ் , உம்ரான் மாலிக், ஷர்துல் தாக்கூர், அக்சர் படேல், ஜெய்தேவ் உனத்கட்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Kerala Govt Pongal holidays
Sanjay Bangar Sanju Samson
pongal (1) (1)
jallikattu price
JammuKashmir
rain heavy