சோதனை மேல் சோதனை… ஐபிஎல் வரலாற்றில் மோசமான சாதனை படைத்த ஆர்.சி.பி.!
முதல்முறையாக ஆல் அவுட் ஆன அணி என்ற மோசமான பெருமையை பெற்றது பெங்களூரு அணி.
16-வது சீசன் ஐபிஎல் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தொடரின் 9-வது போட்டி, நேற்று இரவு கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின.
அதன்படி, டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸ் முடிவில் கொல்கத்தா அணி 20 ஒவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் குவித்தது. அதனைத்தொடர்ந்து, 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் பெங்களூரு அணி களமிறங்கியது.
ஆனால், கொல்கத்தா அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் பெங்களூரு அணியின் அனைத்து வீரர்களும் தடுமாறினார். இறுதியில்,பெங்களூரு தனது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது. 17.4 ஓவர்கள் முடிவில் 123 ரன்கள் எடுத்த பெங்களூரு அணியை கொல்கத்தா அணி வென்றது.
இந்த போட்டியில் விக்கெட்டுகளை இழந்ததன் மூலம் நடப்பு ஐபிஎல் சீசனில் முதல்முறையாக ஆல் அவுட் ஆன அணி என்ற மோசமான பெருமையை பெங்களூரு அணி பெற்றது. மேலும், ஐபிஎல் வரலாற்றில் 15 முறை 125 ரன்களுக்கு கீழ் டெல்லி அணி ஆல்அவுட் ஆனது. இப்போட்டியில் 123 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனதன் மூலம் டெல்லி அணியின் சாதனையை பெங்களூரு அணி சமன் செய்துள்ளது.