தோள்பட்டையில் பயங்கர காயம்…ஐபிஎல் தொடரில் விலகிய ‘ஆர்.சி.பி வீரர்’…அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
தோள்பட்டை காயம் காரணமாக நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக விளையாடும், இங்கிலாந்து வீரர் ரீஸ் டாப்லே விலகல்.
கடந்த ஏப்ரல் 2-ம் தேதி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவின் வேகப்பந்து வீச்சாளர் ரீசே டோப்லிக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதால் ஐபிஎல் 2023 இல் இருந்து விலகியுள்ளார். அந்த போட்டியில் ரீசே டோப்லி தனது 2 ஓவர்கள் பந்து வீசி 14 ரன்களுக்கு 1 விக்கெட் எடுத்தார். போட்டியில் பீல்டிங்க் செய்து கொண்டிருந்தபோது டைவிங் செய்து பந்தை தடுத்தார்.
அப்போது அவருக்கு தோள்பட்டை பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, அவர் கடந்த திங்களன்று தனது கையில் பேண்டேஜ் அணிந்து ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் மற்ற வீரர்களுடன் கொல்கத்தாவிற்கு வந்தார். ஆனால், நேற்றய போட்டியில் அவர் விளையாடவில்லை , அவருக்கு பதிலாக லெவன்சில் டேவிட் வில்லி மாற்றப்பட்டார்.
View this post on Instagram
மேலும், இப்போது காயம் காரனமாக ரீசே டோப்லி தனது சொந்த நாட்டிற்க்கு திரும்பியுள்ளார். இங்கிலாந்து நாட்டை சேர்ந்த இவரை பெங்களூர் அணி 1.9 கோடிக்கு ஏலம் எடுத்திருந்தது. ஏற்கனவே பெங்களூர் அணியில் இருந்து வில் ஜாக்ஸ் மற்றும் ரஜத் படிதார் விலகியுள்ள நிலையில், தற்போது 3-வது வீரராக ரீசே டோப்லி விலகியுள்ளது ரசிகர்களுக்கு சோகத்தை கொடுத்துள்ளது.