ஒழுங்கா பந்துவீசு ப்ரோ! பாண்டியாவுக்கு வார்னிங் கொடுத்த கேப்டன் ரோஹித்!!

Harthik Pandiya Rohit Sharma

Hardik Pandiya : ஹர்திக் பாண்டியாவின் வருகிற டி20 உலகக்கோப்பையில் இடம் பெறுவதை குறித்து தற்போது சில தகவல்கள் வெளியாகி உள்ளது.

தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஆன ஹர்திக் பாண்டியா ஒரு மோசமான ஃபார்ம்மில் இருந்து வருகிறார். அவரது இந்த மோசமான ஆட்டம் தற்போது வர உள்ள இந்த டி20 உலகக்கோப்பை தொடருக்கு கேள்வி குறியாக எழுந்துள்ளது. என்னதான் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாக ஹர்திக் பாண்டியா இருந்தாலும் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தான் செயலாற்றி வருகிறார்.

இதனால் டி20 உலகக்கோப்பை தொடருக்கான அணியை தேர்ந்தெடுக்கும் ஒரு பொறுப்பு ரோஹித் சர்மாவிடம் இருப்பதால் சமீபத்தில் நடைபெற்ற ஒரு சந்திப்பில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா, தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் பிசிசிஐயின் தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் ஆகியோர் மும்பையில் உள்ள பிசிசிஐ தலைமையகத்தில் சமீபத்தில் சந்தித்து உள்ளதாக தகவல்கள் வெளியானது.

அந்த சந்திப்பில் வரவிருக்கும் டி20 உலகக்கோப்பை தொடரின் இந்திய அணியை தேர்ந்தெடுக்கும் வீரர்களை பற்றி பேசியதாக தெரிய வருகிறது. மேலும் அந்த சந்திப்பில், ஹர்திக் பாண்டியா போல சிறப்பான ஒரு ஆல்-ரவுண்டர் தற்போது ஃபார்மில் இல்லாதது வரவிருக்கும் டி20 உலகக்கோப்பைக்கு இந்திய அணிக்கு பெரிய பின்னடைவாக இருக்கும்.

அதனால் முறையாக அவரை இதன் பிறகு நடக்கும் மும்பை அணியின் எல்லா போட்டியிலும் பந்து வீச வேண்டும் என்று அதனை பொறுத்தே அவரை டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் இடம்பெற வைப்பதை குறித்து முடிவெடுப்போம் என்று ரோஹித் சர்மா, பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் தேர்வாளர் அஜித் அகர்கர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதுவரை நடைபெற்ற மும்பை போட்டியில்  ஹர்திக் பாண்டியா வெறும் 4 போட்டிகளில் மட்டும் பந்து வீசிய அவர் வெறும் 3 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ளார். அவரது பேட்டிங்கை பார்க்கையில் 6 போட்டிகளில் 131 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ஒரு இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா, மும்பை அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியாவிற்கு ஒரு வார்னிங் கொடுத்திருக்கிறார் என்று கிரிக்கெட் ரசிகர்கள் சமூகவலைதளத்தில் பேசி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்