தோனியின் 5-வயது மகளுக்கு மிரட்டல் விடுத்த 12-ஆம் வகுப்பு சிறுவன் கைது

Published by
Venu

தோனியின் மகளுக்கு மிரட்டல் விடுத்த சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை அணி தொடர்ச்சியாக தோல்வி அடைந்து வரும் நிலையில் தோனியின் மனைவி ஷாக்சியின் இன்ஸ்டாகிராமில் அவர்களது 5 வயது மகளான ஷிவா தோனிக்கு பாலியல் மிரட்டல் விடுக்கும் வகையில் மர்ம நபர் கமெண்ட் செய்தார்  .இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவியது.எனவே இது தொடர்பாக ராஞ்சி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இதனிடையே இது தொடர்பாக குஜராத்தின் கட்ச் பகுதியை சேர்ந்த  12-ஆம் வகுப்பு படிக்கும் சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர். கமெண்ட் செய்தது அவர்தான் என ஒப்புக்கொண்டார் என்று கட்ச் காவல் கண்காணிப்பாளர் சவுரப் சிங் கூறியுள்ளார்.”ராஞ்சி போலீஸ் வந்த பிறகு சிறுவனை அவர்களிடம் ஒப்படைப்போம்” என்றும் தெரிவித்துள்ளார்.

தற்போது விறுவிறுப்பாக ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. நடப்பு ஐபிஎல் சீசனை பொறுத்தவரை 3 முறை கோப்பையை கைப்பற்றிய சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றிக்காக தடுமாறி வருகிறது.சென்னை அணியை பொறுத்தவரை இந்த சீசனில் மொத்தம் 7 போட்டிகளில் விளையாடி உள்ளது.இதில் 2 வெற்றிகள் ,5 தோல்விகள் அடங்கும்.  விளையாடிய போட்டிகளில் சென்னை அணி வெற்றியின் விளிம்பு வரை வந்து தோல்வி அடைந்துள்ளது.இதனால் ரசிகர்கள் கடும் விரக்தியில் உள்ளனர்.குறிப்பாக சென்னை அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங் சரி இல்லை என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்து வருகின்றனர்.இதன் விளைவாக சமூக வலைத்தளங்கள் மூலம் ரசிகர்கள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Venu

Recent Posts

தேசத்தில் அழிக்கும் கட்சி ஒன்று இருக்கிறதென்றால் அது பாஜக! செல்வப்பெருந்தகை விமர்சனம்!தேசத்தில் அழிக்கும் கட்சி ஒன்று இருக்கிறதென்றால் அது பாஜக! செல்வப்பெருந்தகை விமர்சனம்!

தேசத்தில் அழிக்கும் கட்சி ஒன்று இருக்கிறதென்றால் அது பாஜக! செல்வப்பெருந்தகை விமர்சனம்!

சென்னை : சமீபத்தில் கோவையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சிவகங்கை தொகுதி கார்த்தி சிதம்பரம் எம்.பி.காங்கிரஸ்…

1 minute ago
CSK vs RR : அதிரடி காட்டிய ஜெய்ஸ்வால் – வைபவ்..! சென்னை மீண்டும் தோல்வி.!CSK vs RR : அதிரடி காட்டிய ஜெய்ஸ்வால் – வைபவ்..! சென்னை மீண்டும் தோல்வி.!

CSK vs RR : அதிரடி காட்டிய ஜெய்ஸ்வால் – வைபவ்..! சென்னை மீண்டும் தோல்வி.!

டெல்லி : ஐபிஎல் 2025 இன் 62வது போட்டி செவ்வாய்க்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு…

7 hours ago
தனது ரோல் மாடலுக்கு மரியாதை செலுத்திய அஜித் குமார்.! வைரலாகும் வீடியோ..,தனது ரோல் மாடலுக்கு மரியாதை செலுத்திய அஜித் குமார்.! வைரலாகும் வீடியோ..,

தனது ரோல் மாடலுக்கு மரியாதை செலுத்திய அஜித் குமார்.! வைரலாகும் வீடியோ..,

இத்தாலி : சினிமாவுக்கு பிரேக் விட்டுள்ள அஜித்குமார், கார் ரேஸில் பங்கேற்று வருகிறார். அவ்வப்போது பேட்டிகளும் கொடுத்து ரசிகர்களை கனெக்ட்டிலே…

7 hours ago
CSK vs RR: பவுலிங்கில் மிரட்டிய ராஜஸ்தான்.., 188 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சிஎஸ்கே.!CSK vs RR: பவுலிங்கில் மிரட்டிய ராஜஸ்தான்.., 188 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சிஎஸ்கே.!

CSK vs RR: பவுலிங்கில் மிரட்டிய ராஜஸ்தான்.., 188 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சிஎஸ்கே.!

டெல்லி : ஐபிஎல் 2025 இன் 62வது போட்டி செவ்வாய்க்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு…

9 hours ago
ஆதி கைலாஷ் யாத்திரை பாதையில் நிலச்சரிவு.., 100 பேர் சிக்கி தவிப்பு.!ஆதி கைலாஷ் யாத்திரை பாதையில் நிலச்சரிவு.., 100 பேர் சிக்கி தவிப்பு.!

ஆதி கைலாஷ் யாத்திரை பாதையில் நிலச்சரிவு.., 100 பேர் சிக்கி தவிப்பு.!

உத்தரகாண்ட் : உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆதி கைலாஷ் யாத்திரை பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டதால் பக்தர்கள், உள்ளுர் மக்கள் 100 பேர்…

10 hours ago
பாகிஸ்தான் தளபதிக்கு பதவி உயர்வு.! யார் இந்த அசிம் முனீர்.?பாகிஸ்தான் தளபதிக்கு பதவி உயர்வு.! யார் இந்த அசிம் முனீர்.?

பாகிஸ்தான் தளபதிக்கு பதவி உயர்வு.! யார் இந்த அசிம் முனீர்.?

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர், அந்நாட்டின் மிக உயர்ந்த ராணுவப் பதவியான ஃபீல்ட் மார்ஷலாக…

10 hours ago