‘டிரேடிங் முறை’ மூலம் அணிகள் மாறிய.. தேவ்தத் படிகல், அவேஷ் கான்..! எந்தந்த அணிக்கு தெரியுமா..!

17 ஆவது சீசன் ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் 19-ம் தேதி, துபாயில் நடைபெற உள்ளது. ஏலத்திற்கு முன் ‘டிரேடிங் முறை’ மூலம் வீரர்களை விற்றுக்கொள்ளலாம். இதனால் ஐபிஎல் அணிகள் ஒருவருக்கொருவர்  தங்கள் வீரர்களை ‘டிரேடிங் முறை’ விற்றும், வாங்கியும் வருகின்றனர்.

இதற்கிடையில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், ராஜஸ்தான் ராயல் அணிகள் ‘டிரேடிங் முறை’ மூலம் 2 வீரர்களை வாங்கி கொண்டனர். அதன்படி ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வந்த தேவ்தத் படிக்கல் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வாங்கியுள்ளது. அதேபோல் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக  விளையாடி வந்த நட்சத்திர வீரரான ஆவேஷ் கானை ராஜஸ்தான் அணி வாங்கியுள்ளது.

இதன்காரணமாக இனிமேல் தேவ்தத் படிகல் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காகவும், அவேஷ் கான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காகவும் விளையாடவுள்ளனர்.

ராஜஸ்தானுக்காக விளையாடிய தேவ்தத் படிகல்:

ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வந்த தேவ்தத் படிகல் 2023 ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடவில்லை. அவர் 11 போட்டிகளில் விளையாடி 261 ரன்கள் எடுத்தார். இதில் 2 அரைசதங்கள் அடிக்கப்பட்டன. முந்தைய ஐபிஎல் அதாவது 2022 இன்னும் மோசமாக விளையாடினார். அதில் அவர் 17 போட்டிகளில்  விளையாடி 376 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

லக்னோவுக்காக விளையாடிய அவேஷ் கான்:

மறுபுறம், அவேஷ் கானைப் பற்றி பேசினால், அவர் ஐபிஎல் 2023 -ல் லக்னோவுக்காக மொத்தம் 9 போட்டிகளில் விளையாடினார். அதில் அவர் 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதற்கு முன், 2022 ஐபிஎல் தொடரில் அவேஷ் கான் சிறப்பாக விளையாடினார். அதில் அவர் 13 போட்டிகளில் 18 விக்கெட்டுகளை எடுத்தார்.  இதுமட்டுமின்றி அவேஷ் கானுக்கு சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய அனுபவமும் உள்ளது.

அவர் இந்தியாவுக்காக ஒருநாள் மற்றும் டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ளார். அவர் இதுவரை 5 ஒருநாள் மற்றும் 16 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். மேற்கிந்தியத் தீவுகள் ஆல்ரவுண்டர் ரோமாரியோ ஷெப்பர்டு டிரேடிங் முறையின் மூலம் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியிலிருந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விற்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்