இந்திய அணி முதல் இன்னிசை மட்டும் மனதில் வைத்து பவுலிங் அட்டாக்கை தேர்வு செய்துள்ளது என ரிக்கி பாண்டிங் கருத்து.
லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கிய ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதுமட்டுமில்லாமல், ஆஸ்திரேலிய அணியில் நிறைய இடது கை பேட்மேன்கள் இருப்பது தெரிந்தும், சீனியர் பந்துவீச்சாளர், அனுபவம் வாய்ந்த வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினை அணியில் எடுக்காததால் பலரும் அதிர்ச்சியடைந்தனர்.
இருப்பினும், முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி தொடக்க வீரர்கள் வார்னர் 43 ரன்கள் மற்றும் லபஸ்சன் 26 ரன்களும், கவாஜா டக் அவுட் ஆகி வெளியேறினார்கள். பின்னர் விக்கெட்டை பறி இழக்காமல் ட்ராவல்ஸ் ஹெட் சதம் அடித்தும், ஸ்மித் அரைசதம் அடித்தும் அபாரமாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். விக்கெட்டை எடுக்க முடியாமல் இந்திய அணி பவுலர்கள் திணறினர்.
நேற்று முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 85 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 327 ரன்கள் எடுத்துள்ளனர். களத்தில் ஹெட் 146* ரன்களுடனும், ஸ்மித் 95* ரன்களுடனும் உள்ளனர். இன்று இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்கும். மறுபக்கம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியின் இந்திய அணி அஸ்வினை எடுக்காததற்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட பலரும் தங்கள்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில், லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வினை நீக்கிய இந்தியாவின் முடிவை குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கருத்து கூறியுள்ளார்.
இதுதொடர்பாக ஸ்டார் ஸ்போர்ட்ஸில் பேசிய அவர், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில், இந்திய அணி முதல் இன்னிசை மட்டும் மனதில் வைத்து பவுலிங் அட்டாக்கை தேர்வு செய்துள்ளது. ஆஸ்திரேலிய அணியில் நிறைய இடது கைது பேட்ஸ்மேன்கள் உள்ளதால், ஜடேஜாவை விட அஷ்வின் சவாலாக இருப்பார், எனவே, இந்திய அணி தவறு செய்துவிட்டது எனவும் கூறியுள்ளார்
சென்னை : கலையரசன் ஒரு சிறந்த நடிகர் என பாராட்டு வாங்குவது பற்றி சொல்லி தான் தெரியவேண்டும் என்று இல்லை. அதற்கு…
மெக்கா: இஸ்லாமியர்களின் புனித தலங்களான மெக்கா, மதீனா மழை வெள்ளத்தில் மிதக்கின்றன. சவுதி அரேபியாவின் மெக்கா மற்றும் மதீனாவில் நேற்று…
சென்னை : சமீபத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்ற சிந்துவெளி பண்பாட்டு கண்டுபிடிப்பு நூற்றாண்டு விழாவில் கருப்பு நிற துப்பட்டா அணிந்திருந்த…
டெல்லி: இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் இன்று காலை 6.30 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இமயமலையின் அடிவாரத்தில் இருக்கும்…
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2வது நாளான இன்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்…
சென்னை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்ள மாடு பிடி வீரர்கள் தயாராகி வருகிறார்கள்.…