#TataIPL2022:இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் லக்னோவுக்கு பதிலடி கொடுக்குமா டெல்லி அணி?..!

Default Image

டாடா ஐபிஎல் 2022 இன் 45-வது ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை இன்று (மே 1 ஆம் தேதி) மதியம் 3.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் எதிர்கொள்கிறது.டாடா ஐபிஎல் சீசனின் புள்ளிகள் பட்டியலில் டெல்லி கேபிடல்ஸ் தற்போது ஆறாவது இடத்தில் உள்ளது, அதே நேரத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் தற்போது புள்ளிகள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.

டாடா ஐபிஎல் சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணி இதுவரை எட்டு போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில்,நான்கு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.அதே சமயம்,லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி இந்த சீசனில் ஒன்பது ஆட்டங்களில் விளையாடி ஆறு ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளது.

தனது கடைசி ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் தரப்பில் டேவிட் வார்னர் 42 ரன்களும்,குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

மறுபுறம்,லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் தனது கடைசி ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக விளையாடி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.அந்த ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் சார்பில் குயின்டன் டி காக் 46 ரன்களும், தீபக் ஹூடா 34 ரன்களும் குவித்தனர்.

இதற்கு முன்னதாக,இந்த ஐபிஎல் சீசனில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி டெல்லி கேப்பிடல்ஸை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.இந்த நிலையில்,டெல்லி கேப்பிடல்ஸ் அணி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிராக இரண்டாவது முறையாக இன்று களமிறங்குகிறது.

கணிக்கப்பட்ட டெல்லி அணி:பிருத்வி ஷா, டேவிட் வார்னர்,மிட்செல் மார்ஷ்,ரிஷப் பந்த் (கேப்டன்&வி.கீப்பர்),ரோவ்மன் பவல்,லலித் யாதவ், அக்சர் படேல்,ஷர்துல் தாக்கூர்,குல்தீப் யாதவ்,முஸ்தாபிசுர் ரஹ்மான், சேத்தன் சகாரியா

கணிக்கப்பட்ட லக்னோ அணி: குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), KL ராகுல் (கேப்டன்),மார்கஸ் ஸ்டோனிஸ்,க்ருனால் பாண்டியா,தீபக் ஹூடா, ஆயுஷ் படோனி,ஜேசன் ஹோல்டர்,துஷ்மந்த சமீரா,மொஹ்சின் கான், அவேஷ் கான்,ரவி பிஷ்னோய்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்