பஞ்சாப் அணியில் தமிழக வீரர்.. பேருந்தில் வைத்து கொண்டாடிய தமிழக அணி!
இந்தாண்டு ஐபிஎல் தொடரில் தமிழ்நாடு அணி வீரர் ஷாரூக்கானை பஞ்சாப் கிங்ஸ் அணி, 5.25 கோடிக்கு எடுத்தது. அதனை தமிழக அணி, பேருந்தில் வைத்து கொண்டாடும் விடியோவை தினேஷ் கார்த்திக் வெளியிட்டுள்ளார்.
2021 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் அணிகள், தங்களுக்கு தேவையான வீரர்களை தேர்தெடுப்பதற்கான ஏலம் நேற்று மாலை 3 மணிக்கு சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்று வந்தது. இதில் 164 இந்திய வீரர்கள் உட்பட மொத்தம் 292 வீரர்களை ஒவ்வொருவராக ஏலம் விடப்பட்டு வந்தனர்.
இந்த ஏலத்தில் தமிழ்நாடு அணி வீரர் ஷாரூக்கான் இடம்பெற்றுள்ளார். அவரின் அடிப்படை விலை 50 லட்சமாகும். சையத் முஷ்டக் அலி டி20 தொடரில் இவரின் சிறந்த பேட்டிங்கால் இவரின் ஸ்ட்ரைக் ரேட் 220.0 என உயர்ந்து, முதலிடம் பிடித்தார். இதன்காரணமாக ஷாருக்கானை ஐபிஎல் ஏலத்தில் எடுக்க அணிகளிடையே கடும் போட்டி நிலவ வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அதன்படி இவரை எடுக்க டெல்லி, பஞ்சாப், மும்பை அணி போட்டிபோட்டுக்கொண்டு வந்த நிலையில், பஞ்சாப் அணி இவரை 5.25 கோடிக்கு வாங்கியது. இந்நிலையில் தமிழக கிரிக்கெட் அணி வீரர்கள், பேருந்தில் பயணிக்கும்போது ஐபிஎல் ஏலத்தை லைவாக பார்த்துக்கொண்டிருந்தனர்.
அப்பொழுது ஷாருக்கானை பஞ்சாப் அணி, 5.25 கோடிக்கு எடுத்ததை அறிந்த அவர்கள், பேருந்தில் வைத்தே கைதட்டி ஷாரூக்கானுக்கு வாழ்த்துக்கள் கூறினார்கள். அந்த விடியோவை தினேஷ் கார்த்திக், அவரின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
Turn up the volume and listen to the team’s happiness for our bright ⭐#IPLAuction pic.twitter.com/wkDfFbqGGP
— DK (@DineshKarthik) February 18, 2021