தமிழக வீரர் ஜெகதீசனின் இமாலய சாதனை.! முதல் தர கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 5 சதம் விளாசல்.!
ஜெகதீசன் முதல் தர போட்டிகளில் தொடர்ச்சியாக 5 சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.
விஜய் ஹசாரே தொடரில் தமிழ்நாடு அணிக்காக விளையாடிவரும் ஜெகதீசன் அருணாச்சல பிரதேச அணிக்கு எதிராக இன்று சதமடித்ததன் மூலம் முதல்தர போட்டிகளில் தொடர்ச்சியாக 5 சதமடித்து சாதனை படைத்துள்ளார்.
இதற்கு முன்னதாக சர்வதேச போட்டிகளில் இலங்கையின் குமார் சங்கக்காரா உலகக்கோப்பையில் 4 சதம் தொடர்ச்சியாக அடித்திருந்தார். தென் ஆப்பிரிக்காவின் அல்விரா பீட்டர்சன் மொமெண்ட்டம் ஒருநாள் தொடரில் 4 சதம் தொடர்ச்சியாக அடித்திருந்தார். மற்றும் தேவதத் படிக்கல் கர்நாடக அணிக்காக விஜய் ஹசாரே தொடரில் 4 சதம் தொடர்ச்சியாக அடித்திருந்தார்.
அதற்கு பின் இந்த விஜய் ஹசாரே தொடரில் இன்றைய போட்டியில் ஜெகதீசன், அருணாச்சல பிரதேச அணிக்கெதிராக 5 ஆவது சதத்தை இரட்டை சதமாக அடித்ததுடன், சுதர்சனுடன் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 416 ரன்கள் அடித்து மற்றொரு புதிய சாதனை படைத்திருக்கிறது.