தாலிபான்கள் கிரிக்கெட்டை விரும்புவதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைமை நிர்வாக அதிகாரி ஹமீத் ஷின்வாரி தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் தாலிபான்களால் கடுமையான அரசியல் மாற்றம் ஏற்பட்ட நிலையிலும்,கிரிக்கெட் பாதிக்கப்படாது என்று அந்நாட்டின் கிரிக்கெட் வாரிய தலைமை நிர்வாக அதிகாரி ஹமீத் ஷின்வாரி தெரிவித்துள்ளார்.
காபூலில் இருந்து பிடிஐ உடன் பேசிய ஷின்வாரி,தாலிபான்கள் நாட்டின் ஆட்சியை கைப்பற்றினாலும் தேசிய அணியின் உறுப்பினர்களும் அவர்களது குடும்பங்களும் பாதுகாப்பாக இருப்பதாகவும் உறுதியளித்தார்.மேலும்,இது தொடர்பாக அவர் கூறியதாவது:
தாலிபான்கள் ஆதரவு:
“தாலிபான்கள் கிரிக்கெட்டை விரும்புகிறார்கள்.அவர்களின் ஆட்சியில் விளையாட்டில் பாதிப்பு ஏற்படுவதை நான் பார்க்கவில்லைஆரம்பத்தில் இருந்தே அவர்கள் எங்களுக்கு ஆதரவளித்துள்ளனர். எங்கள் நடவடிக்கைகளில் அவர்கள் தலையிடவில்லை.எங்கள் கிரிக்கெட் முன்னேற தாலிபான்களின் ஆதரவை எதிர்பார்க்கிறேன். இந்த மாத தொடக்கத்தில் ஆப்கானிஸ்தான் தலைமை தேர்வாளர் பதவியை ராஜினாமா செய்த அசதுல்லா கான், தாலிபான் ஆட்சியில் கிரிக்கெட் ஒரு பாதிப்பாக இருக்காது என்று நினைத்தார்.மேலும்,மறு அறிவிப்பு வரும் வரை நான் தலைமை நிர்வாக அதிகாரியாக இருப்பேன்.
செழித்து வளர்ந்த கிரிக்கெட்:
நாட்டில் கிரிக்கெட்டின் எழுச்சி 1996 மற்றும் 2001 க்கு இடையில் தாலிபான்களின் ஆட்சியுடன் ஒத்துப்போனது, அண்டை நாடான பாகிஸ்தானில் உள்ள பல ஆப்கானிஸ்தான் அகதிகள் அப்போது கிரிக்கெட் விளையாட்டைத் தேர்ந்தெடுத்தனர்.
இதனால்,தாலிபான் காலத்தில் கிரிக்கெட் செழித்து வளர்ந்தது என்று சொல்லலாம்.அவர்கள் ஆப்கானிஸ்தானில் விளையாட்டை முக்கிய அங்கமாக்கினார்கள் என்பதும் உண்மை.
நல்ல விஷயம்:
தற்போது நல்ல விஷயம் என்னவென்றால், நாங்கள் இயல்பு நிலையை நோக்கி செல்கிறோம். மக்கள் வேலை செய்யத் தொடங்கியுள்ளனர்.நாளை முதல் நாங்கள் எங்கள் அலுவலகத்த்தில் பணிகளை தொடங்குவோம்”,என்று கூறினார்.
இதனையடுத்து,வீரர்களின் பாதுகாப்பு குறித்து அவர் பேசுகையில்: “வெளிநாடுகளில் விளையாடும் நான்கைந்து வீரர்கள் தவிர மற்றவர்கள் அனைவரும் காபூலில் இருக்கிறார்கள். நான் சொன்னது போல், அவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் மற்றும் நன்றாக இருக்கிறார்கள்.
எதிர்பார்ப்பு:
பிசிசிஐ இந்த முன்னேற்றங்களை கண்காணித்து வருகிறது மற்றும் இந்தியா பிரீமியர் லீக்கில் ஆப்கானிஸ்தான் வீரர்களின் பங்கேற்பை எதிர்பார்க்கிறது.ஆப்கானிஸ்தான் செப்டம்பர் 1 முதல் கொலம்போவில் பாகிஸ்தானுக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது.இதற்கிடையில்,ரஷித், நபி மற்றும் முஜீப் ஆகியோர் ஐபிஎல்லின் ஒரு பகுதியாக இருப்பார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று பிசிசிஐ வட்டாரம் தெரிவித்துள்ளது.
விருப்பம்:
நான் தனிப்பட்ட முறையில் தாலிபான்கள் ஆட்சி செய்த பகுதிகளுக்குச் சென்றிருக்கிறேன். அவர்கள் விளையாட்டை மிகவும் விரும்புகின்றனர்.
தாலிபான்கள் ஆட்சியில் கிரிக்கெட் ஒரு பிரச்சினையாக இருக்கக்கூடாது. ஏனெனில்,கிரிக்கெட்டில் அதிகப்படியான அரசியல் தலையீடு கடந்த 24 மாதங்களில் விளையாட்டை எதிர்மறையாக பாதித்துள்ளது, அது மாற வேண்டும்” என்று தேசிய அணியின் தலைமை மற்றும் தலைமை நிர்வாகத்தில் அடிக்கடி ஏற்படும் நிர்வாக மாற்றங்களைக் குறிப்பிட்டு கான் கூறினார்.
ரியோ டி ஜெனிரோ : 19-வது ஜி20 உச்சி மாநாடானது இன்று பிரேசில் தலைநகரான ரியோ டி ஜெனிரோவில் தொடங்குகிறது.…
சென்னை : மணிப்பூரில் ஏற்பட்ட கலவரத்தில் பலி எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே 5…
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், காலை 10 மணி வரை டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும்…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலிய மண்ணில் 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதுதான் உலகமே எதிர்பார்த்துக்…
சென்னை : நேற்றைய நாள் காவிரி சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்தியதற்கு விவசாய சங்கங்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்ற…
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…