ஐபிஎல் போட்டிக்காக பயிற்சியில் இறங்கிய தல தோனி.!
ஐபிஎல் போட்டிக்காக கடுமையாக பயிற்சியில் தல தோனி களமிறங்கியுள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அதிகரித்ததை தொடர்ந்து மார்ச் மாதம் நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டியை தாற்காலிகமாக ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டது. பின்னர், பிசிசிஐ இந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டியை நடத்த முடிவு செய்தது.
அதன்படி போட்டி செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் நவம்பர் 8-ம் தேதி வரை நடைபெறும் என்று ஐபிஎல் நிர்வாகம் அறிவித்தது. இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள இந்தாண்டு ஐபிஎல் போட்டிகாக அணைத்து ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளார்கள்.
இந்த நிலையில் இந்த ஐபிஎல் போட்டிக்காக அணைத்து கிரிக்கெட் வீரர்களும் தங்களது வீட்டிலே பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள், இந்நிலையில் ராஞ்சியில் கடந்த வாரம் தோனி பேட்டிங் பயிற்சியில்
ஈடுபட்டுள்ளார்.
மேலும் ஜார்க்கண்ட் கிரிக்கெட் சங்க அலுவலக பணியாளர் ஒருவர் கூறுகையில் இத பற்றி கூறுகையில் கேப்டன் தோனி கடந்த வார இறுதியில் எங்கள் மைதானத்துக்கு வந்தார் இங்கு வந்து பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டார்.அதற்கு பிறகு இங்கு வரவில்லை என்று கூறியுள்ளார்.