நேற்றைய போட்டியில் ராயுடு இல்லாதது ஏன்..? காரணம் கூறிய தல தோனி..!
நேற்று டி20 தொடரின் 4-வது லீக் போட்டியில் சென்னை VS ராஜஸ்தான் அணிகள் மோதியது. இப்போட்டி ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.முதலில் விளையாடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 216 ரன்கள் எடுத்தது.
அதற்கு பிறகு களம் இறங்கிய சென்னை அணி 5 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்து 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. மேலும் இந்த தோல்வி குறித்து தோனி கூறியதாவது, நான் நீண்ட காலமாக பேட்டிங் செய்யவில்லை.
14 நாட்கள் தனிமைப்படுத்தலும் ஆட்டத்திற்கு உதவவில்லை. நான் மெதுவாக தொடருக்குள் நுழைந்து கொண்டு இருக்கிறேன். அதே போல் பலதரப்பட்ட விஷயங்களையும் நாம் முயற்சிக்க வேண்டி உள்ளது, அதாவது சாம் கரண் அல்லது ரவீந்திர ஜடேஜாவை முன்னால் இறக்கிப் பார்க்க வேண்டி உள்ளது.
மேலும் 217 ரன்கள் விரட்டுவதற்கு ஒரு நல்ல தொடக்கம் வேண்டும் அது எங்களுக்கு நிகழவில்லை.
மேலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் சஞ்சு சாம்சன் மிகவும் சிறப்பாக விளையாடினார். மேலும் எங்களது அணியில் சுழற்பந்து வீச்சாளர்கள் மிகவும் பிழை செய்தனர் என்றும் கூறியுள்ளார்.
அதற்கு பிறகு பேசிய தோனி முதல் போட்டியில் சிறப்பாக விளையாடிய அம்பத்தி ராயுடு நேற்றைய போட்டியில் விளையாடவில்லை என்பதை பற்றி தோனி கூறியுள்ளார் அதில் பேசிய தோனி எங்கள் அணியில் ராயுடு 100% பிட்டாக இல்லை என்பதால் அவருக்கு மாற்றாக ருதுராஜ் விளையாடுகிறார் என்று கூறியுள்ளார்.