தல தோனி மிகவும் வலிமையானவர் – ஆஷிஷ் நெஹ்ரா..!

Default Image

தோனி எதிராளிகளின் மனதை படிப்பதில் மிகவும் சிறந்தவர் என்றும் ஆஷிஷ் நெஹ்ரா கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன், தோனி அவர்கள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப்போவதாக கடந்த சனிக்கிழமை அறிவித்தார். இந்நிலையில் இந்த செய்தி, ஒட்டுமொத்த ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. தோனி ஓய்வு குறித்து கிரிக்கெட் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், என பலரும் வாழ்த்துக்கள், மற்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தோனியை பற்றி சில கருத்துக்களை கூறியுள்ளார், அதில் ஆஷிஷ் நெஹ்ரா கூறியது தோனி தன்னை தானாகவே வளர்த்து கொண்டார் ஏனென்றால் தோனி கிரிக்கெட்டில் நுழையும் பொழுது அந்த அளவிற்கு ஒன்றும் சிறப்பான பேட்ஸ்மேனாக இல்லை .

அதற்கு பிறகு அவர் கால்பந்து போன்றவற்றை விளையாடி தன்னுடைய உடலை வலிமைப் படுத்திகொண்டு தன்னை தானாகவே வளர்த்துக்கொண்டார் மேலும் தோனி மிகுந்த கூச்ச சுபாவம் மிக்கவர் ஏனென்றால் மூத்த கிரிக்கெட் வீரர்களுடன் அந்த அளவிற்கு இணைய மாட்டார் என்றும் ஆஷிஷ் நெஹ்ரா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மேலும் பேசிய ஆஷிஷ் நெஹ்ரா தோனி மற்றவர்களைப்போல் மிகவும் வேகமாக தோனி கோபப்படமாட்டார் அனைத்து வீரர்களிடமும் அன்பாக பழகுவார் அதற்கு மாறாக அவர் எந்த ஒரு உணர்ச்சிகளையும் மறக்கும் திறமை கொண்டவர், என்றும் கூறியுள்ளார் கிரிக்கெட் அணியில் உள்ள இளம் வீரர்கள் அனைவருக்கும் தோனியின் கருத்து கண்டிப்பாக கிடைக்கும் அவர்களது பிரச்சனையைதோணியிடம் கூறினார் அணைத்து விதமான சந்தேகங்களையும் தோனியின் மூலம் தீர்த்துக் கொள்ளலாம்.

தோனி மனதளவில் மிகவும் வலிமையானவர் எந்த ஒரு சூழ்நிலைகளிலும் அணியை பொறுமையாக வெற்றி பெற செய்வதில் வல்லவர் என்றும் எதிராளிகளின் மனதை படிப்பதில் மிகவும் சிறந்தவர் என்றும் ஆஷிஷ் நெஹ்ரா கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்