ஹெட் விக்கெட் எடுக்கிறது ஈசி இல்லை கண்ணா! இந்தியாவுக்கு சவால் விட்ட ஸ்டிவ் ஸ்மித்!
நாக் அவுட் ஆட்டங்களில் இந்தியாவை விட அவர்கள் சிறப்பாக விளையாடி இருக்கிறார்கள் என ஆஸ்ரேலியா கேப்டன் ஸ்டிவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. இந்த போட்டியை அரையிறுதி போட்டி என்பதை தாண்டி இன்னும் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்க காரணமே இந்த போட்டியில் ஆஸ்ரேலியா அணியும் இந்திய அணியும் மோதுகிறது என்பதால் தான். இந்த இரண்டு அணிகளும் மோதுகிறது என்றாலே போட்டியின் மீது பெரிய எதிர்பார்ப்புகள் இருக்கும்.
அப்படி தான் இந்த போட்டிக்கும் இருந்து வருகிறது. இந்த போட்டியின் மூலம் ஆஸ்ரேலியா அணிக்கு இந்திய அணி பதிலடி கொடுக்குமா? என்பது தான் பெரிய கேள்வியாக இருந்து வருகிறது. ஏனென்றால், ஐசிசி சர்வதேச போட்டிகளில் கடந்த 14 ஆண்டுகளாக ஆஸ்திரேலிய அணியை, இந்திய அணி வீழ்த்தியதே இல்லை.
இரு அணிகளுக்கும் ஐஐசி கோப்பை போட்டிகளில் நாக் அவுட் வெற்றி -தோல்வி கணக்கீடு என பார்த்தல் மொத்தம் 7 போட்டிகளில் இந்தியா 4 போட்டிகளில் வென்றுள்ளது. ஆஸ்திரேலியா 3 போட்டிகளில் வென்றுள்ளது. ஆனால், அந்த 4 போட்டிகளும் 1998, 2000, 2007, 2011 ஆகும். 2011 காலிறுதி போட்டிக்கு பிறகு ஆஸ்திரேலியாவிடம் இந்திய அணி 2015 உலகக்கோப்பை அரை இறுதி மற்றும் 2023 உலகக்கோப்பை இறுதி போட்டிகளில் தோல்வியையே தழுவியுள்ளது.
எனவே பதிலடி கொடுக்கும் வகையில் இன்று களம் காண்கிறது. இந்த போட்டியில் இந்திய அணி பந்துவீச்சாளர்கள் யாருடைய விக்கெட்டை வீழ்த்த திட்டமிட்டு இருப்பார்கள் என்றால் டிராவிஸ் ஹெட் விக்கெட்டை தான். ஏனென்றால், இந்தியாவுக்கு எதிரான போட்டி என்றாலே சின்னரசை கையில பிடிக்க முடியாது என்பது போல அதிரடியாக விளையாடுவார்.
இதுவரை இந்தியாவுக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட்டில் 9 ஒருநாள் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக அவர் விளையாடி இருக்கிறார். 9 போட்டிகளில் 345 ரன்கள் ஒரு சதமும் அடித்துள்ளார். அதேபோலவே இன்றயை போட்டியிலும் இந்தியாவுக்கு எதிராக அதிரடியாக விளையாடுவார் என அணியின் கேப்டன் ஸ்டிவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசும்போது ” நாக் அவுட் ஆட்டங்களில் நியூசிலாந்துதான் ஆரம்ப காலத்தில் முன்னிலையில் இருந்தது. இந்தியாவை விட அவர்கள் சிறப்பாக விளையாடி இருக்கிறார்கள். அதன்பிறகு ஆஸ்ரேலியா அணி அவர்களை விட சிறப்பாக விளையாட ஆரம்பித்தது. பெரும்பாலான நாட்களில் இந்தியாவை எதிர்த்துப் போராடுவார்கள் என்று அவர்கள் நினைக்கும் ஒரு அணி இருந்தால், அது ஆஸ்திரேலியாவாக இருக்க வேண்டும்.
இந்தியாவுக்கு எதிராக எங்களுடைய அணியில் தூணாக இருக்கும் ஒரு வீரர் என்றால் அது டிராவிஸ் ஹெட் தான். அந்த அளவுக்கு அவர் அதிரடியாக ஆடக்கூடிய ஒரு வீரராக இருந்து வருகிறார். எனவே, அவருடைய விக்கெட்டை எடுப்பதற்காக தான் இந்திய வீரர்கள் முயற்சி செய்வார்கள். ஆனால், அவருடைய விக்கெட்டை வீழ்த்துவது என்பது இந்திய அணிக்கு சவாலானதாக இருக்கும்.
அவர் இந்தியாவுக்கு எதிராக பார்டர் கவாஸ்கர் ட்ராபி, உலகக்கோப்பை போட்டி ஆகியவற்றில் சிறப்பாக விளையாடி இருக்கிறார். எனவே, துபாயில் நடைபெறும் இந்த போட்டியிலும் அவர் சிறப்பாக விளையாடுவார். கடந்த காலங்களில் இந்தியாவுக்கு எதிராக என்ன செய்தாரோ அதை தான் இந்த போட்டியிலும் செய்வார் என எதிர்பார்க்கிறேன்” எனவும் ஸ்டிவ் ஸ்மித் இந்தியாவுக்கு எச்சரிக்கை விடும் வகையில் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
ஆனந்த் அம்பானியின் வந்தாரா: வனவிலங்கு மறுவாழ்வு மையத்தை திறந்து வைத்து சிங்கக்குட்டிக்கு பாலூட்டிய மோடி.!
March 4, 2025
“தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும்” வானிலை கொடுத்த சூடான அப்டேட்.!
March 4, 2025