கொஞ்சம் டைம் எடுத்துட்டு ஆடுங்க! விராட் கோலிக்கு முன்னாள் வீரர் கொடுத்த அட்வைஸ்!

Published by
பால முருகன்

விராட் கோலி :  டி20 உலகக்கோப்பை 2024 கிரிக்கெட் தொடரில் விராட் கோலி சரியாக விளையாடாத காரணத்தால் அவருடைய பார்ம் சற்று விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. குரூப் சுற்று போட்டிகளில் இந்திய அணி விளையாடிய நிலையில், அந்த போட்டிகளில் விராட் கோலியால் பெரிய அளவில் ரன்களை அடிக்க முடியவில்லை. எனவே, அவருடைய பார்ம் குறித்த விமர்சனங்கள் ஒரு பக்கம் போய்க்கொண்டு இருக்கிறது.

ஒரு பக்கம் விமர்சனங்கள் வந்தாலும், மற்றோரு பக்கம் முன்னாள் வீரர்கள் விராட் கோலி பார்முக்கு திரும்புவார் என கூறி வருகிறார்கள். இந்நிலையில், சிறிது நேரம் நேரம் எடுத்துக்கொண்டு விளையாடினாள் பழைய பார்முக்கு வரலாம் என விராட் கோலிக்கு இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா அட்வைஸ் கொடுத்துள்ளார். இது குறித்து தனது யூடியூப் சேனலில் பேசிய ஆகாஷ் சோப்ரா ” ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடைபெறவுள்ள போட்டியில் விராட் கோலி மீண்டும் பழைய படி, ஃபார்முக்கு திரும்புவார் என நான் நம்புகிறேன்.

virat [File Image]
இந்த உலகக் கோப்பையில் அவர் இதுவரை பெரிய அளவில் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. எனவே, இதனை எல்லாம் கருத்தில் கொண்டு அவர் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக சிறப்பாக விளையாடுவார் என நம்புகிறேன். பெங்களூருவில் நடந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் கடைசி போட்டியில், முதல் பந்திலேயே சிக்ஸருக்கு முயற்சித்து அவுட் ஆனார். எனக்கு இன்னும் நினைவுக்கு இருக்கிறது.

எனவே, இந்த முறை அந்த மாதிரி எல்லாம் ரிஸ்க் எடுத்து விளையாடாமல் கொஞ்சம் நேரம் எடுத்துக்கொண்டு பொறுமையாக விளையாடினாள் நன்றாக இருக்கும். ஃபசல்ஹக் ஃபாரூக்கி மற்றும் நவீன்-உல்-ஹக் ஆகியோர் சிறந்த ஃபார்மில் இருப்பதால் அவர்களுடைய பந்துவீச்சை எதிர்கொள்ளும்போது கவனமாக இருக்கவேண்டும். எனவே அவசர படாமல் கடந்த 3 போட்டிகளில் விளையாடியது போல் இல்லாமல் நிதானமாக விராட் கோலி விளையாடவேண்டும்” எனவும் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

நான் மனித நேயமற்றவனா? ‘என் பெயருக்கு களங்கம் விளைவிக்கப் பார்க்கின்றனர்’ – அல்லு அர்ஜுன்!

ஹைதராபாத்: 'புஷ்பா 2' சிறப்புக் காட்சியின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு, பெண் உயிரிழந்ததற்கு, 'போலீஸ் சொன்னதை மதிக்காமல், அல்லு அர்ஜுன்…

21 minutes ago

புயல் எச்சரிக்கை தளர்வு… 9 துறைமுகங்களில் ஏற்பட்ட 1ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு இறக்கம்!

சென்னை: வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதை தொடர்ந்து, தூத்துக்குடி உட்பட 9 துறைமுகங்களில் நேற்று முன் தினம்…

29 minutes ago

“ரகுபதி சட்டத்துறை அமைச்சரா? பேட்டை ரவுடியா? ” அண்ணாமலை கடும் விமர்சனம்!

சென்னை : அண்மையில் புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசுகையில், பல்வேறு குற்ற வழக்குகளில் சிக்கியவர்களை பாஜக…

13 hours ago

பாமக மாநாடு : உழவர்களின் முக்கிய 10 பிரச்சனைகள்… பட்டியலிட்ட ராமதாஸ்!

திருவண்ணாமலை : இன்று (டிசம்பர் 21) பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் திருவண்ணாமலை சந்தைமேடு பகுதியில் 'உழவர் பேரியக்க மாநாடு'…

14 hours ago

திருவள்ளூர் ஊர்காவல்படையில் காலிபணியிடங்கள் அறிவிப்பு!  விண்ணப்பிப்பது எப்படி?

திருவள்ளூர் : தமிழ்நாடு ஊர்காவல் படை காவலர்களுக்கான காலிபணியிடங்களை நிரப்பும் அறிவிப்புகள் குறிப்பிட்ட இடைவெளியில் மாவட்ட வாரியாக அறிவிக்கப்பட்டு வருகின்றன.…

15 hours ago

அல்லு அர்ஜுன் மீது சரமாரி குற்றச்சாட்டு.! “இனி சிறப்பு காட்சி இல்லை” – முதல்வர் ரேவந்த் ரெட்டி அதிரடி!

தெலங்கானா : 'புஷ்பா 2' படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க வந்த பெண் உயிரிழந்த விவகாரம் குறித்து, தெலங்கானா முதல்வர்…

16 hours ago