கொஞ்சம் டைம் எடுத்துட்டு ஆடுங்க! விராட் கோலிக்கு முன்னாள் வீரர் கொடுத்த அட்வைஸ்!
விராட் கோலி : டி20 உலகக்கோப்பை 2024 கிரிக்கெட் தொடரில் விராட் கோலி சரியாக விளையாடாத காரணத்தால் அவருடைய பார்ம் சற்று விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. குரூப் சுற்று போட்டிகளில் இந்திய அணி விளையாடிய நிலையில், அந்த போட்டிகளில் விராட் கோலியால் பெரிய அளவில் ரன்களை அடிக்க முடியவில்லை. எனவே, அவருடைய பார்ம் குறித்த விமர்சனங்கள் ஒரு பக்கம் போய்க்கொண்டு இருக்கிறது.
ஒரு பக்கம் விமர்சனங்கள் வந்தாலும், மற்றோரு பக்கம் முன்னாள் வீரர்கள் விராட் கோலி பார்முக்கு திரும்புவார் என கூறி வருகிறார்கள். இந்நிலையில், சிறிது நேரம் நேரம் எடுத்துக்கொண்டு விளையாடினாள் பழைய பார்முக்கு வரலாம் என விராட் கோலிக்கு இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா அட்வைஸ் கொடுத்துள்ளார். இது குறித்து தனது யூடியூப் சேனலில் பேசிய ஆகாஷ் சோப்ரா ” ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடைபெறவுள்ள போட்டியில் விராட் கோலி மீண்டும் பழைய படி, ஃபார்முக்கு திரும்புவார் என நான் நம்புகிறேன்.
இந்த உலகக் கோப்பையில் அவர் இதுவரை பெரிய அளவில் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. எனவே, இதனை எல்லாம் கருத்தில் கொண்டு அவர் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக சிறப்பாக விளையாடுவார் என நம்புகிறேன். பெங்களூருவில் நடந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் கடைசி போட்டியில், முதல் பந்திலேயே சிக்ஸருக்கு முயற்சித்து அவுட் ஆனார். எனக்கு இன்னும் நினைவுக்கு இருக்கிறது.
எனவே, இந்த முறை அந்த மாதிரி எல்லாம் ரிஸ்க் எடுத்து விளையாடாமல் கொஞ்சம் நேரம் எடுத்துக்கொண்டு பொறுமையாக விளையாடினாள் நன்றாக இருக்கும். ஃபசல்ஹக் ஃபாரூக்கி மற்றும் நவீன்-உல்-ஹக் ஆகியோர் சிறந்த ஃபார்மில் இருப்பதால் அவர்களுடைய பந்துவீச்சை எதிர்கொள்ளும்போது கவனமாக இருக்கவேண்டும். எனவே அவசர படாமல் கடந்த 3 போட்டிகளில் விளையாடியது போல் இல்லாமல் நிதானமாக விராட் கோலி விளையாடவேண்டும்” எனவும் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.