“என்னையும் எடுங்கப்பா” அதிரடி பேட்டிங் மூலம் இந்தியாவுக்கு செய்கை காட்டிய முகமது ஷமி!

சையத் முஷ்டாக் அலி ட்ராபி தொடரில் சண்டிகர் அணிக்கு எதிரான போட்டியில் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி 17 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார்.

mohammed shami smat

பெங்களூர் : இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தற்போது சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் பெங்கால் அணிக்காக விளையாடி வருகிறார். இந்த தொடரில் சண்டிகர் அணிக்கு எதிரான போட்டியில் இதுவரை பந்துவீச்சில் எதிரணியை மிரள வைத்து வந்த முகமது ஷமி பேட்டிங்கிலும் அதிர வைத்துள்ளார்.

சண்டிகர் அணிக்கு எதிரான போட்டி டிசம்பர் 9 பெங்களூரு எம்.சின்னசாமி ஸ்டேடியம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில், பெங்கால் அணியின் இன்னிங்கிஸின் போது முகமது ஷமி 17 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார். 3 பவுண்டரிகளும், 2 சிக்ஸர்களும் விளாசி அதிரடி காட்டினார்.

ஷமி தனது அதிரடி ஆட்டத்தால் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தது மட்டுமின்றி என்னையும் பார்டர் கவாஸ்கர் ட்ராபி தொடரில் எடுங்கள் என்பது போல அவருடைய அதிரடி ஆட்டம் இருந்தது.

இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்ரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் ட்ராபி தொடரில் விளையாடி வருகிறது. இந்த மாதிரி முக்கியமான போட்டியில் அணிக்கு முக்கிய பந்துவீச்சாளராக திகழும் முகமது ஷமி இல்லாதது இந்திய அணிக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

காயம் காரணமாக அவர் ஓய்வில் இருந்த காரணத்தால் அவரால் பார்டர் கவாஸ்கர் ட்ராபி  தொடரில் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இருப்பினும் பிறகு காயம் சரியான காரணத்தால் எந்த போட்டிகளிலும் அவர் மீண்டும் அணிக்கு திரும்பலாம் எனவும் கூறப்பட்டது.

ஆனால், தற்போது காயம் குணமடைந்து ஷைத் அலி ட்ராபி தொடரில் அவர் விளையாடி வரும் சூழலில் இன்னும் என் இந்திய அணிக்கு திரும்பவில்லை என்ற கேள்விகளும் எழுந்துள்ளது. இதற்கு கேப்டன் ரோஹித் சர்மா ஏற்கனவே இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ” ஷமி இன்னும் முழு உடற்தகுதியுடன் இல்லை அவர் 100 % தகுதியான பிறகு அவர் அணிக்கு திரும்பலாம்” என்று பதிலும் அளித்திருந்தார். எனவே, அவர் அணிக்கு திரும்புவரா? இல்லையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்