டி-20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்றிரவு பலப்பரீட்சை நடத்துகிறது.
7-வது டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 17-ஆம் தேதி ஐக்கிய அரசு அமீரகத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று இறுதி போட்டியை எட்டியுள்ளது. இன்றிரவு துபாயில் நடைபெறும் இறுதிப்போட்டியில் ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலியா – வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது.
உலகக்கோப்பையை வெல்லப்போவது யார் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் இப்போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. கடந்த 2010-ம் ஆண்டில் ஆஸ்திரேலிய அணி இறுதிப்போட்டியில் இங்கிலாந்திடம் தோற்று கோப்பையை இழந்தது. நியூசிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு வந்திருப்பது இதுதான் முதல் முறை.
இந்தப் போட்டியில் எந்த அணி வென்றாலும் அவர்களுக்கு இது முதலாவது டி-20 உலக கோப்பையாக இருக்கும். இன்று நடக்கும் போட்டியில் டாஸ்தான் வெற்றியை தீர்மானிக்கும் என்று கணிக்கிறார்கள். எனவே, இரு அணிகளும் இதுவரை 20 ஓவர் உலக கோப்பையை வென்றது இல்லை. முதல் முறையாக சாம்பியன் பட்டம் பெறப்போவது ஆஸ்திரேலியாவா? நியூசிலாந்தா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம்தாக்குதலில் 26 இந்தியர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு TRF எனும் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று இருந்தது.…
விருதுநகர் : பட்டாசு ஆலையில் தீ விபத்து சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறுவது தொடர் கதையாகி வருகின்றன. இன்றும் சிவகாசி அருகே…
லண்டன் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் அக்கட்சி பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொள்ளும்…
சென்னை : இன்றும் நாளையும் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில்…