ஐசிசி டி-20 உலகக் கோப்பை வெற்றியை ஆஸ்திரேலிய வீரர்கள் ஷூவில் பீர் ஊத்தி குடித்து கோலாகலாமாக கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற ஐசிசி டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியும், வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் விளையாடியது.இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 172 ரன்களை எடுத்தது. இதில், அதிரடியாக விளையாடிய கேப்டன் கேன் வில்லியம்சன் 48 பந்துகளில் 85 ரன்களை எடுத்திருந்தார். ஆஸ்திரேலியா பந்துவீச்சை பொறுத்தளவில் அதிகபட்சமாக ஜோஷ் ஹேசில்வுட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனைத்தொடர்ந்து, 173 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி இறுதியாக 18.5 ஓவரில் 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது.அதுமட்டுமில்லாமல் முதல் முறையாக ஐசிசி டி-20 உலகக் கோப்பையை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது.
சிறப்பாக விளையாடிய மிட்செல் மார்ஷ் இறுதி வரை களத்தில் இருந்து 50 பந்துகளில் 6 பவுண்டரிகள் 4 சிக்ஸர்களுடன் 77 ரன்கள் அடித்து அணிக்கு வெற்றியை பெற்று தந்தார். இவருடன் ஜோடி சேர்ந்த கிளென் மேக்ஸ்வெல் 18 பந்துகளில் 28 ரன்கள் அடித்து களத்தில் இருந்தார்.நியூசிலாந்து பந்துவீச்சை பொறுத்தளவில் டிரெண்ட் போல்ட் மட்டுமே 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
கடந்த 2010-ம் ஆண்டில் ஆஸ்திரேலிய அணி இறுதிப்போட்டியில் இங்கிலாந்திடம் தோற்று கோப்பையை இழந்த நிலையில்,நேற்று தனது முதல் டி-20 உலக கோப்பையை கைப்பற்றி வரலாறு படைத்தது.
இந்நிலையில்,வெற்றிக்கு பிறகு ஆஸ்திரேலிய அணியின் வீரர்கள் ஒரு வித்தியாசமான கொண்டாட்டத்தில் ஈடுபட்டு,கோலாகலமாக கொண்டாடினர்.தற்போது,இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவை ஐசிசி,”என்ன நேத்து அடித்த சரக்கில் போதை தெளிந்ததா? என்ற தோரணையில்,”உங்கள் திங்கட்கிழமை எப்படி இருந்தது?(How was your Monday?)” என்று கேள்வியை எழுப்பி பகிர்ந்துள்ளது.அதன்படி,டிரஸ்ஸிங் ரூமில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவில்,ஆஸ்திரேலிய வீரர் வேட் தனது ஷூவை எடுத்து அதில் பீர் ஊற்றி குடித்ததைக் காணலாம்.அவரைத் தொடர்ந்து,ஸ்டோனிஸ் அதே ஷூவை எடுத்துக்கொண்டு பீர் குடித்ததையும் நாம் காணலாம்.இந்த வீடியோவை வெறும் 20 நிமிடங்களில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…