#T20WorldCup2022: டாஸ் வென்ற யூ.ஏ.இ(UAE) முதலில் பேட்டிங் .!
ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் இரண்டாவது ஆட்டத்தில் டாஸ் வென்று யூ.ஏ.இ(UAE)அணி பேட்டிங் தேர்வு செய்திருக்கிறது.
ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது டி-20 உலகக்கோப்பை தொடரின் தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்றுவருகிறது. அதில் இன்று (அக்-16) இரண்டு போட்டிகள் நடைபெறுகிறது. முதல் ஆட்டத்தில் இலங்கைக்கு எதிராக நமீபியா அசத்தல் வெற்றி பெற்றது. இந்த நிலையில் இரண்டாவது ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகம்(UAE) மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற அணி முதலில் செய்யப்போவதாக அறிவித்திருக்கிறது. இரு அணிகளின் வீரர்கள் விவரம் பின்வருமாறு,
ஐக்கிய அரபு அமீரக(UAE) அணி: முஹம்மது வசீம், சிராக் சூரி, ஆர்யன் லக்ரா, விருத்தியா அரவிந்த்(W), சுண்டங்கபோயில் ரிஸ்வான்(C), பாசில் ஹமீத், ஜாவர் ஃபரித், கார்த்திக் மெய்யப்பன், அகமது ராசா, சபீர் அலி, ஜாகூர் கான், அலிஷான் ஷரபு, ஜுனைத் சித்திக், காஷிப் தாவூத், அயன் அஃப்சல் கான்
நெதர்லாந்து அணி: ஸ்டீபன் மைபர்க், மேக்ஸ் ஓடோவ்ட், ஸ்டீபன் மைபர்க், விக்ரம்ஜித் சிங், பாஸ் டி லீடே, டாம் கூப்பர், ஸ்காட் எட்வர்ட்ஸ்(C/W), லோகன் வான் பீக், டிம் பிரிங்கிள், ரோலோஃப் வான் டெர் மெர்வே, ஷாரிஸ் அகமது, டிம் வான் டெர் குக்டன், பால் வான் மீகெரென் , கொலின் அக்கர்மேன், ஃப்ரெட் கிளாசென், தேஜா நிடமானுரு, பிராண்டன் குளோவர்