#T20WORLDCUP2022: யூ.ஏ.இ அணி 111க்கு ஆல் அவுட்,நெதர்லாந்து அணி நல்ல தொடக்கம்.!
டி-20 உலகக்கோப்பை தொடரின் இரண்டாவது போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த யூ.ஏ.இ(UAE), 20 ஓவர்கள் முடிவில் 111/8 ரன்கள் குவித்தது.
ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் இரண்டாவது தகுதிச்சுற்று போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த யூ.ஏ.இ(UAE) அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் எடுத்திருக்கிறது. அந்த அணியில் அதிகபட்சமாக முஹம்மது வசீம் 41 ரன்கள் குவித்தார். நெதர்லாந்து அணியில் பாஸ் டி லீடே 3 விக்கெட்களும், ஃப்ரெட் கிளாசென் 2 விக்கெட்களும் வீழ்த்தினர்.
112 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து அணி தற்போது விளையாடிவருகிறது. பவர்பிளே (6 ஓவர்கள்)முடிவில் நெதர்லாந்து, 2 விக்கெட் இழப்புக்கு 42 ரன்கள் எடுத்து விளையாடிவருகிறது. நெதர்லாந்து அணிக்கு வெற்றி பெற இன்னும் 84 பந்துகளில் 70 ரன்கள் தேவைப்படுகிறது.