டி-20 உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டியில் நமீபியா அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வென்றுள்ளது.
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் முதல் தகுதிச்சுற்று போட்டியில் இலங்கை மற்றும் நமீபியா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பௌலிங் செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய நமீபியா 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் குவித்தது. நமீபியாவில் அதிகபட்சமாக ஜான் ஃபிரைலின்க் 44 ரன்களும், ஜே.ஜே ஸ்மிட் 31 ரன்களும் குவித்தனர். இலங்கை அணியில் பிரமோத் மதுஷன் 2 விக்கெட்கள் எடுத்தார்.
164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி நமீபியாவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறியது. முடிவில் இலங்கை அணி19 ஓவர்களில் 108 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதனால் நமீபியா அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை எளிதில் வென்றது. ஜான் ஃபிரைலின்க் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
சென்னை : தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.880 குறைந்துள்ளதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த 2…
சென்னை :இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது .இன்றைய குழந்தைகள் நாளைய இந்தியாவை உருவாக்குவார்கள்…
கொல்கத்தா : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் ரசிகர்களுக்கு இன்னும் என்னென்ன சர்ப்ரைஸான விஷயங்கள் எல்லாம் இருக்கப்போகிறதோ என்கிற…
சென்னை : வைகோ அப்பலோ ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வலது தோள்பட்டை காயம் காரணமாக 2 நாள்களுக்கு முன்…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி தன் தாய்க்கு முறையாகச் சிகிச்சை…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவருக்கு நடந்த கத்திக்குத்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள…