கடைசி நேரத்தில் ஆஸ்திரேலியா விமானத்தை தவற விட்டதால் ஷிம்ரான் ஹெட்மயர், டி-20 உலககோப்பையிலிருந்து வெளியேறியுள்ளார்.
டி-20 உலகக்கோப்பை திருவிழா அக்-16 ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்கவுள்ளது. இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியைச் சேர்ந்த அதிரடி வீரர் ஷிம்ரான் ஹெட்மயர், ஆஸ்திரேலியா செல்லும் விமானத்தை தவற விட்டுள்ளதால் அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். ஹெட்மயர், தனது குடும்ப சூழ்நிலை காரணமாக சனிக்கிழமை கிளம்ப வேண்டிய விமானத்திலிருந்து திங்கள் கிழமை மாற்றி தருமாறு அணி நிர்வாகத்திடம் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் நேற்று செல்லும் விமானத்தில் புறப்படத் தயாராயிருந்தார். ஆனால், அவர் நேற்றும் விமானத்தில் தன்னால் குறித்த நேரத்தில் ஏற முடியவில்லை என்று நிர்வாகத்திடம் கூறியிருக்கிறார்.
இதனால் அணி நிர்வாகம் அவரிடம் ஏற்கனவே கூறியிருந்த அடிப்படையில் ஹெட்மயருக்கு பதிலாக ஷமார் ப்ரூக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து வெஸ்ட் இண்டீஸ் நிர்வாக இயக்குனர் ஜிம்மி ஆடம்ஸ் கூறியதாவது, இந்த உலகக்கோப்பை தொடர் எவ்வளவு பெரிய தொடர் என்பது ஹெட்மயருக்கு நன்றாக தெரிந்த ஒன்று தான். ஆஸ்திரேலியா வர தாமதம் ஏற்படும் பட்சத்தில் ஷிம்ரான் ஹெட்மயர் நீக்கப்படுவார் என்பதும் அவர் அறிந்த ஒன்றே. தற்போது அவருக்கு பதிலாக சேர்க்கப்பட்டுள்ள ஷமார் ப்ரூக்ஸ், வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக கடந்த ஒரு வருடத்தில் 11 டி-20 போட்டிகளில் விளையாடிஇருக்கிறார் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
குரூப் B இல் இடம்பிடித்த வெஸ்ட் இண்டீஸ் அணி, சூப்பர் 12 க்கு செல்வதற்கு முன்பாக முதல் சுற்றில் ஸ்காட்லாந்து, ஜிம்பாப்வே, அயர்லாந்து அணிகளுடன் போராட வேண்டியிருக்கும் .
சென்னை : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
சென்னை : மக்கள் பலரும் விரும்பி பார்த்து வந்த பிக் பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சி ஒரு வழியாக நேற்று…
காசா : அக்டோபர் 2023-ல் தொடங்கிய இஸ்ரேல் - ஹமாஸ் போரால் கடந்த 15 மாதங்களுக்கு மேலாக காசா நகர்…
கேரளா : பராசலாவை அடுத்த மூறியன்கரை பகுதியை சேர்ந்த இளைஞர் ஷாரோன் ராஜ் என்பவருக்கு அவரை காதலித்து வந்த கிரிஷ்மா கடந்த…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து அப்பகுதியில் 2வது விமான நிலைய முனையமாக காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் புதிய…