#T20WORLDCUP2022: வெஸ்ட் இண்டீஸ் அணியிலிருந்து நீக்கப்பட்ட பிரபல வீரர், காரணம் என்ன தெரியுமா?

Default Image

கடைசி நேரத்தில் ஆஸ்திரேலியா விமானத்தை தவற விட்டதால் ஷிம்ரான் ஹெட்மயர், டி-20 உலககோப்பையிலிருந்து வெளியேறியுள்ளார்.

டி-20 உலகக்கோப்பை திருவிழா அக்-16 ஆம் தேதி ஆஸ்திரேலியாவில்  தொடங்கவுள்ளது. இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியைச் சேர்ந்த அதிரடி வீரர் ஷிம்ரான் ஹெட்மயர், ஆஸ்திரேலியா செல்லும் விமானத்தை தவற விட்டுள்ளதால் அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். ஹெட்மயர், தனது குடும்ப சூழ்நிலை காரணமாக சனிக்கிழமை கிளம்ப வேண்டிய விமானத்திலிருந்து திங்கள் கிழமை மாற்றி தருமாறு அணி நிர்வாகத்திடம் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் நேற்று செல்லும் விமானத்தில் புறப்படத் தயாராயிருந்தார். ஆனால், அவர் நேற்றும் விமானத்தில் தன்னால் குறித்த நேரத்தில் ஏற முடியவில்லை என்று நிர்வாகத்திடம் கூறியிருக்கிறார்.

இதனால் அணி நிர்வாகம் அவரிடம் ஏற்கனவே கூறியிருந்த அடிப்படையில் ஹெட்மயருக்கு பதிலாக ஷமார் ப்ரூக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து வெஸ்ட் இண்டீஸ் நிர்வாக இயக்குனர் ஜிம்மி ஆடம்ஸ் கூறியதாவது, இந்த உலகக்கோப்பை தொடர் எவ்வளவு பெரிய தொடர் என்பது ஹெட்மயருக்கு நன்றாக தெரிந்த ஒன்று தான். ஆஸ்திரேலியா வர தாமதம் ஏற்படும் பட்சத்தில் ஷிம்ரான் ஹெட்மயர் நீக்கப்படுவார் என்பதும் அவர் அறிந்த ஒன்றே. தற்போது அவருக்கு பதிலாக சேர்க்கப்பட்டுள்ள ஷமார் ப்ரூக்ஸ், வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக கடந்த ஒரு வருடத்தில் 11 டி-20 போட்டிகளில் விளையாடிஇருக்கிறார் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

குரூப் B இல் இடம்பிடித்த வெஸ்ட் இண்டீஸ் அணி, சூப்பர் 12 க்கு செல்வதற்கு முன்பாக முதல் சுற்றில் ஸ்காட்லாந்து, ஜிம்பாப்வே, அயர்லாந்து அணிகளுடன் போராட வேண்டியிருக்கும் .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்