#T20WorldCup: பார்வை மாற்றுத்திறனாளி டி20 உலக கோப்பை – இந்திய அணி அபார வெற்றி!
மூன்று டி20 உலகக்கோப்பை போட்டியிலும் இந்திய பார்வை மாற்றுத்திறனாளிகள் அணி சாம்பியன் பட்டம் வென்று சாதனை.
பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கான உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. பெங்களூரில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் வங்கதேச அணியை 121 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
பார்வையற்றோருக்கான 3வது டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் முதலில் ஆடிய இந்திய பார்வை மாற்றுத்திறனாளிகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 278 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய வங்கதேசம் பார்வை மாற்றுத்திறனாளிகள் அணி 20 ஓவர் முடிவில் 157 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது.
இதனால் 2022 ஆம் ஆண்டுக்கான பார்வையற்றோருக்கான டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் வங்கதேச அணியை 121 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய பார்வை மாற்றுத்திறனாளிகள் அணி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.
இறுதிப் போட்டியில் இந்திய அணியின் சுனில் ரமேஷ் அதிகபட்சமாக 136*(63), கேப்டன் ஏ.கே.ரெட்டி 100*(50) ரன்கள் எடுத்தனர். இதுவரை நடைபெற்ற 3 பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கான நடைபெற்ற டி20 உலகக்கோப்பை போட்டியிலும் இந்திய பார்வை மாற்றுத்திறனாளிகள் அணி வென்று இந்திய கிரிக்கெட் வரலாற்றில் சாதனை படைத்துள்ளது என்பது என்பது குறிப்பிடத்தக்கது.
????CHAMPIONS????
????CHEERS FOR TEAM INDIA????
BOYS IN BLUE WON THE 3RD T20 WORLD CUP FOR THE BLIND????????#noticekaroindia #blindcricketworldcup #blind @narendramodi @ianuragthakur @KirenRijiju @TCGEHLOT @BCCI @JayShah @YUVSTRONG12 @harbhajan_singh @anandmahindra @AnupamPKher @AskAnshul pic.twitter.com/k3EJ13H74C
— Differently Abled Cricket Council of India (@dcciofficial) December 17, 2022