#T20WorldCup: டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி ஃபீல்டிங் தேர்வு.!
உலகக்கோப்பை தொடரின் இன்றைய முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஸ்ரீலங்கா ஆகிய அணிகளிடையே பலப்பரீச்சை.
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 குரூப் சுற்று போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்றைக்கு இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளது. முதல் போட்டியான சூப்பர் 12 குரூப் 1-ல் தெம்பா பாவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்காவும், தசுன் ஷனக தலைமையிலான ஸ்ரீலங்கா அணியும் விளையாட உள்ளது.
ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதனிடையே நடைபெற்ற போட்டிகளில் தென்னாபிரிக்க அணி 2 போட்டிகளில் விளையாடி ஒன்றில் வெற்றி பெற்றுள்ளது. இதுபோன்று ஸ்ரீலங்கா அணி 2 போட்டிகளில் ஒன்று வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தென்னாப்பிரிக்கா அணி வீரர்கள்:
தெம்பா பவுமா (c), குயின்டன் டி காக்(w), ரஸ்ஸி வான் டெர் டுசென், ஐடன் மார்க்ரம், ரீசா ஹென்ட்ரிக்ஸ், டேவிட் மில்லர், டுவைன் பிரிட்டோரியஸ், கேசவ் மகாராஜ், ககிசோ ரபாடா, அன்ரிச் நார்ட்ஜே, தப்ரைஸ் ஷம்சி ஆகியோர் இடம்பற்றுள்ளனர்.
ஸ்ரீலங்கா அணி வீரர்கள்:
குசல் பெரேரா(w), பாத்தும் நிஸ்ஸங்க, சரித் அசலங்க, அவிஷ்க பெர்னாண்டோ, பானுக ராஜபக்ச, தசுன் ஷனக(c), வனிந்து ஹசரங்க, சாமிக்க கருணாரத்ன, துஷ்மந்த சமீர, மஹீஷ் தீக்ஷன, லஹிரு குமார ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.