#T20WorldCup: முகமது ஷாஜாத் அதிரடி……நமீபியா அணிக்கு 161 ரன்கள் இலக்கு..!

Default Image

ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்துள்ள நிலையில்,நமீபியாவுக்கு 161 ரன்கள் இலக்கு.

கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை போட்டியின் சூப்பர் 12 குரூப் சுற்றின் இன்றைய தினத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் நமீபியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது.

இப்போட்டியானது அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் மைதானத்தில் இன்று மதியம் 3.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.அதன்படி, போட்டிக்கு முன்னதாக டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்த நிலையில்,அணியின் தொடக்க வீரர்களாக ஹஸ்ரத்துல்லாஹ் ஜசாய்,முகமது ஷாஜாத் ஆகியோர் களமிறங்கினர்.

ஆரம்பம் முதலே இருவரும் அதிரடியாக விளையாடி அணிக்கு ரன்கள் சேர்த்த நிலையில்,ஹஸ்ரத்துல்லாஹ் 33 ரன்களில் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழக்க,இதனையடுத்து,களமிறங்கிய ரஹ்மானுல்லா குர்பாஸ் 4 ரன்களில் எல்பிடபுள்யூ ஆகி வெளியேறினார்.பின்னர்,முகமது ஷாஜாத் 45 ரன்களும் எடுத்த நிலையில் கேட்ச் கொடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.

இதனைத் தொடர்ந்து,நஜிபுல்லா சத்ரான் 7 ரன்களில் எல்பிடபுள்யூ ஆன நிலையில்,அஸ்கர் ஆப்கானுடன் இணைந்து கேப்டன் முகமது நபி நிதானத்தைக் கடைபிடித்து அணிக்கு ரன்களை சேர்த்தார்.இந்த நிலையில்,அஸ்கர் ஆப்கான் 31 ரன்கள் எடுத்து 18 வது ஓவரின் கடைசியில் ரூபன் டிரம்பெல்மேன் பந்து வீச்சில் மைக்கேல் வான் லிங்கனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.பின்னர்,குல்பாடின் நைப் களமிறங்கினார்.

இறுதியில்,20 ஓவர் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்துள்ளது.முகமது ஷாஜாத் எடுத்த 45 ரன்களே அணியின் அதிகபட்ச தனிநபர் ரன்னாக உள்ளது.கேப்டன் முகமது நபி 32* ரன்கள் குல்பாடின் 1* ரன்.

நமீபியா அணியைப் பொறுத்தவரை ரூபன் ட்ரம்பெல்மேன்,ஜான் நிகோல் லோஃப்டி-ஈடன் ஆகியோர் அதிகபட்சமாக தலா 2 விக்கெட்டுகளை எடுத்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்