கிரிக்கெட்: டி20 உலககோப்பை தொடர் அமெரிக்காவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இன்று இந்திய கிரிக்கெட் அணி தங்கள் முதல் போட்டியை நியூயார்க் கிரிக்கெட் மைதானத்தில் அயர்லாந்தை எதிர்கொண்டு விளையாடி வருகிறது. டாஸ் ஜெயித்த அயர்லாந்து அணி 16 ஓவர் முடிவில் வெறும் 96 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது.
ஆண்ட்ரூ பால்பிர்னி 5 ரன்களும், கேப்டன் பால் ஸ்டிர்லிங் 2 ரன்களிலும், லோர்கன் டக்கர் 10 ரன்களிலும், கர்டிஸ் கேம்பர் 12 ரன்களும் , கரேத் டெலானி 26 ரன்களும், ஜோசுவா லிட்டில் 14 ரன்களும் எடுத்து அவுட் ஆகினர். மீதம் உள்ள வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட் ஆகி 16 ஓவரில் 96 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தனர்.
இந்திய அணி சார்பில், ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்களும், பும்ரா மற்றும் ஹர்தீப் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், அக்சர் பட்டேல் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்திருந்தனர்.
20 ஓவரில் 97 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி களமிறங்கினர். இதில் விராட் கோலி 2.4 ஓவரில் 1 ரன் மட்டுமே எடுத்திருந்த நிலையில் அவுட் ஆனார்.
அடுத்து, ரிஷப் பண்ட் களமிறங்கி நிதானமான ஆட்டத்தை தொடங்கினார். தொடக்க வீரர் ரோஹித் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்து 52* ரன் எடுத்திருந்தபோது காயம் காரணமாக வெளியேறினார். பின்னர் சூர்யகுமார் யாதவ் களமிறங்கி வெறும் 2 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.
இருப்பினும் மறுபுறம் இருந்த ரிஷப் பண்ட் நிதானமாக விளையாடி அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றார். இறுதியாக இந்திய அணி 12.2 ஓவரில் 2 விக்கெட்டை இழந்து 97 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கடைசிவரை களத்தில் ரிஷப் பண்ட் 36* ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். வருகின்ற 9-ம் தேதி இந்தியா அணி பாகிஸ்தான் அணியுடன் மோதவுள்ளது.
சென்னை : அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த திரைப்படம் வரும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், கடந்த ஞாயிற்று கிழமை ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில்…
சென்னை : நடிகராக மட்டுமல்லாமல் தனக்கு பிடித்த கார் பந்தைய போட்டிகளிலும் தனது திறனை வெளிக்காட்டி வருகிறார் நடிகர் அஜித்…
லக்னோ : ஐபிஎல் 2025-ன் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இன்றைய…
சென்னை : டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை…