T20WorldCup:பங்களாதேஷ் அணி 18.2 ஓவரில் 10 விக்கெட்டையும் இழந்து 84 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.
உலக கோப்பை டி20 போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. அதன்படி,இன்றைய போட்டியில் பங்களாதேஷ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான போட்டி அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் ஸ்டேடியத்தில் இன்று மதியம் 3.30 மணி முதல் நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளது.அதன்படி,பங்களாதேஷ் அணியின் தொடக்க வீரர்களாக நைம்,லிட்டன் தாஸ் களமிறங்கினர்.
ஆனால்,3 வது ஓவரின் இறுதியில் நைம் 9 ரன்கள் எடுத்த நிலையில் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார்.சௌம்யா சர்க்கார் டக் அவுட் ஆனார்.அதன்பின்னர்,முஷ்பிகுர் ரஹீம்,கேப்டன் மஹ்முதுல்லா களமிறங்கிய நிலையில்,ரஹீம் ரன்கள் ஏதும் எடுக்காமலும்,கேப்டன் மஹ்முதுல்லா 3 ரன்கள் எடுத்தும் வந்த வேகத்திலேயே வெளியேறினர்.
அவர்களைத் தொடர்ந்து,களமிறங்கிய அஃபிஃப் ஹொசைனும் டக் அவுட் ஆகி வெளியேறினார்.நிதானமாக விளையாடிய லிட்டன் தாஸ் 24 ரன்கள் எடுத்த நிலையில்,எல்பிடபுள்யு ஆகி விக்கெட்டை பறிகொடுத்தார்.
அதன்பின்னர்,ஷமிம் ஹொசைன்,மகேதி ஹசன் களமிறங்கி நிதானமாக அணிக்கு ரன்கள் சேர்த்த நிலையில்,ஷமிம் கேட்ச் கொடுத்து வெளியேற,தஸ்கின் அகமது இறங்கி 3 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார்.
கடைசியில்,நாசூம் அகமது டக் அவுட்டும்,மகேதி ஹசன் 27 ரன்கள் எடுத்தும் விக்கெட்டை இழந்தனர்.இறுதியில்,18.2 ஓவரிலேயே 10 விக்கெட்டையும் இழந்து பங்களாதேஷ் அணி 84 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் வெளுத்த நிலையில் அடிக்கடி சில இடங்களில் மழையும் பெய்தது. குறிப்பாக,…
சென்னை : சூர்யா தற்போது நடித்துமுடித்துள்ள ரெட்ரோ திரைப்படம் வரும் மே 1-ஆம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில…
சென்னை : இன்று தமிழக வெற்றிக் கழக கட்சி சார்பில், தவெக ஐடி விங் நிர்வாகிகளுக்கு பயிற்சி கூட்டம் நடைபெற்றது.…
பெங்களூர் : நேற்று சின்ன சாமி மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…
சென்னை : தமிழ்நாட்டில் அடுத்தாண்டு (2026) இதே நேரத்தில் சட்டமன்ற தேர்தல் க்ளோபரங்கள் , பரபரப்புகள் என தமிழக அரசியல்…
டெல்லி : இன்றயை காலத்தில் யுபிஐ (UPI - Unified Payments Interface) பரிவர்த்தனை என்பது அதிகரித்துள்ள நிலையில், தொடர்ச்சியாக இதனை…