டி-20 உலகக்கோப்பையில் 2ஆவது அரையிறுதிப்போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி 168/6 ரன்கள் குவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் இன்று அடிலெய்டில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடி வருகின்றனர். இதில் டாஸ் வென்று இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை செய்தது.
இதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான ராகுல் (5), ரோஹித் (27) என பெரிதாக ஸ்கோர் அடிக்க தவறினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார் யாதவும்(14) சோபிக்கவில்லை. விராட் கோலி மற்றும் ஹர்டிக் பாண்டியா ஜோடி சேர்ந்து பொறுப்புடன் விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். ஹர்டிக் பாண்டியா அவ்வப்போது சிக்ஸர், பௌண்டரி என விளாசினார்.
கோலி 50 ரன்கள் எடுத்த நிலையில் ஜோர்டனிடம் ஆட்டமிழந்தார். இறுதியில் பாண்டியா, ரிஷப் பந்த்துடன் ஜோடி சேர்ந்து இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தினார். ஹர்டிக் பாண்டியா அதிரடியாக விளையாடி 29 பந்துகளில் அரைசதமடித்தார்.
20 ஓவர் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் குவித்துள்ளது. அதிகபட்சமாக ஹர்டிக் பாண்டியா 4 பௌண்டரி மற்றும் 5 சிக்ஸர்களுடன் 63 ரன்களும், கோலி 50 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இங்கிலாந்து சார்பில் கிறிஸ் ஜோர்டன் 3 விக்கெட்களும் வீழ்த்தியுள்ளனர்.
சிங்கப்பூர் :உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ( FIDE) சிங்கப்பூரில் இன்று முதல் தொடங்குகிறது. சிங்கப்பூரின் ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசாவில்…
மகாராஷ்டிரா : நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.…
புது டெல்லி : மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி…
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தற்போது வலுவடைந்துள்ளது.மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…