T20 WorldCup SemiFinal: இறுதிப்போட்டிக்குள் நுழையுமா இந்திய அணி? இந்தியா vs இங்கிலாந்து! இன்று இரண்டாவது அரையிறுதி.!

Default Image

டி20 உலக கோப்பையில் இன்று இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் நடந்து வரும் எட்டாவது ஐசிசி டி20 உலக கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. பதினாறு அணிகளுடன் ஆரம்பித்த இந்த டி20 உலக கோப்பைத் தொடர் நான்கு அணிகளுடன் அரை இறுதிக்கு நெருங்கியது.

Final :பாகிஸ்தான் VS ?

நேற்று சிட்னியில் நடைபெற்ற முதல் அரை இறுதியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்துக்கு இடையேயான போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி முதல் அணியாக இறுதிப் போட்டிககுள் நுழைந்தது. பாகிஸ்தானி மூன்றாவது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைகிறது.

இந்திய அணி:

இன்று அடிலைடில் நடைபெறும் இரண்டாவது அரை இறுதி போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பல பரிச்சை நடத்துகின்றன. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இந்த உலகக் கோப்பை தொடரில் சிறப்பான பங்களிப்பு அளித்து வந்திருக்கின்றனர். மேலும் இரு அணிகளும் சம பலத்துடன் இன்றைய போட்டியில் களமிறங்குகின்றனர்.

இந்திய அணியைப் பொறுத்தவரை கேப்டன் ரோகித் சர்மா பயிற்சியின் போது ஏற்பட்ட காயத்திலிருந்து குணமடைந்துள்ளார், மேலும் கேப்டன் ரோகித் சர்மா சில போட்டிகளாக ரன்கள் குவிக்க தவறி வருகிறார், நெதர்லாந்துக்கு எதிராக அவர் அடித்த அரை சதம் தவிர மற்ற போட்டிகளில் பெரிதாக ரன்கள் ஏதும் குவிக்கவில்லை. இன்று இங்கிலாந்துக்கு எதிராக ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடும் பட்சத்தில் இந்திய அணி பெரிய ஸ்கோரை குவிக்கும்.

மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான கே எல் ராகுல் இந்த தொடரின் ஆரம்பத்தில் தடுமாறினாலும் அதற்கு பின்னர் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளார் இதனால் மீண்டும் அவர் பழைய ஃபார்முக்கு திரும்பியுள்ளார் என்றே சொல்லலாம். இந்த உலகக் கோப்பைத் தொடரில் அதிகபட்ச ரன்களை குவித்த விராட் கோலி மற்றும் சமீபத்தில் டி20 தரவரிசை பட்டியலில் நம்பர் ஒன் இடம் பிடித்த சூரியகுமார் யாதவ் என இந்திய அணி பேட்டிங் வரிசை வலுவாகவே உள்ளது. பவுலிங்கிலும் புவனேஸ்வர் குமார், அர்ஷ்தீப் சிங் மற்றும் முகமது ஷமி ஆகியோரின் கூட்டணி பவர் பிளே மற்றும் டெத் ஓவர்களில் சிறப்பாகவே பந்து வீசி வருகின்றனர்.

இங்கிலாந்து அணி:

மற்றொருபுறம் இங்கிலாந்து அணி கேப்டன் ஜாஸ் பட்லர் மீண்டும் அதிரடியை காட்டத் தொடங்கி இருக்கிறார் அந்த அணியில் காயம் காரணமாக விலகிய டேவிட் மலான் இன்னும் குணமடையாததால் இன்றைய போட்டியில் அவர் விளையாட மாட்டார் என்றும் அவருக்கு பதிலாக பிலிப் சால்ட் விளையாட அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

வேகப்பந்து வீச்சாளரான மார்க் வுட்டும் காயமடைந்துள்ளதால் அவரும் இன்றைய போட்டியில் விளையாடுவது சந்தேகமாகியுள்ளது மேலும் அவர் விளையாடாத பட்சத்தில் அவருக்கு பதிலாக கிறிஸ் ஜோர்டன் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நேருக்கு நேர்:

டி20 போட்டிகளில் இதுவரை இரு அணிகளும் நேருக்குநேர் மோதி அதில் இந்திய அணி 12 போட்டியிலும், இங்கிலாந்து அணி 10 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. மேலும் டி20 உலகக்கோப்பை தொடர்களில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதி அதில் இந்திய அணி இரண்டிலும் இங்கிலாந்து அணி ஒரு போட்டியிலும் வென்று இருக்கிறது.

இன்றைய போட்டியில் வெற்றி பெற்று ஞாயிற்றுக்கிழமை மெல்போனில் நடைபெறும் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் மோதுவதற்கு தயாராக இன்று இரு அணிகளும் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் களமிறங்குகின்றன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்