T20 WorldCup SemiFinal: இறுதிப்போட்டிக்குள் நுழைந்த பாகிஸ்தான் அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.!

Default Image
  • பாக். அணி அபார வெற்றி:

மொஹம்மது ஹாரிஸ், இறுதிக்கட்டத்தில் அதிரடியாக விளையாடி அணிக்கு தேவையான பௌண்டரி மற்றும் சிக்ஸர் அடித்தார். ஹாரிஸ் பெர்குசன் வீசிய 18 ஆவது ஓவரில் ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு போர் என அடித்து வானவேடிக்கை காமித்தார்.

இதனால் பாக்.அணி 19.1 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. மொஹம்மது ஹாரிஸ் அதிகபட்சமாக 30 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். நியூசிலாந்து தரப்பில் ட்ரெண்ட் போல்ட் 2 விக்கெட்களும், சாண்ட்னர் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

  • பாக். அணி 17 ஓவர்களில் 132/2:

ரிஸ்வான் 5 பௌண்டரிகளுடன் 57 ரன்கள் எடுத்து ட்ரெண்ட் போல்ட் பந்தில் அவுட் ஆனார். மொஹம்மது ஹாரிஸ் 17 ரன்களும் எடுத்து விளையாடி வருகின்றனர். பாக். அணி வெற்றி பெற இன்னும் 18 பந்துகளில் 21 ரன்கள் தேவைப்படுகிறது.

  • பாக். அணி 15 ஓவர்களில் 122/1.

ரிஸ்வான் 5 பௌண்டரிகளுடன் 54 ரன்களும், மொஹம்மது ஹாரிஸ் 11 ரன்களும் எடுத்து விளையாடி வருகின்றனர். பாக். அணி வெற்றி பெற இன்னும் 30 பந்துகளில் 31 ரன்கள் தேவைப்படுகிறது.

  • ரிஸ்வான் 50*:

ரிஸ்வான் 36 பந்துகளில் தனது  அரைசதத்தை பூர்த்தி செய்தார். பாக். அணி 14 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் குவித்து விளையாடி வருகிறது. ரிஸ்வான் 6 பௌண்டரிகளுடன் 50 ரன்களும், மொஹம்மது ஹாரிஸ் 6ரன்களும் எடுத்து விளையாடி வருகின்றனர்.

  • பாக். அணி முதல் விக்கெட் இழந்தது:

ட்ரெண்ட் போல்ட் வீசிய ஓவரில் பாபர் அசாம், 53 ரன்களுக்கு  மிச்சேலிடம் கேட்ச் கொடுத்து விக்கெட் இழந்தார். பாக். அணி 13 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 109 ரன்கள் குவித்து விளையாடி வருகிறது.

  • பாபர் அசாம் 50*:

பாபர் அசாம் தனது 30 ஆவது டி-20 அரைசதத்தை நிறைவு செய்தார். பாக். அணி 12 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 102 ரன்கள் குவித்து விளையாடி வருகிறது.

  • பாக். அணி 10 ஓவர்களில் 87/0

10 ஓவர்களில் பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 87 ரன்கள் குவித்துள்ளது. ரிஸ்வான்-பாபர் அசாம் ஜோடி பொறுப்புடன் விளையாடி வருகிறது. பாபர் அசாம் 6 பௌண்டரிகளுடன் 43 ரன்களும், ரிஸ்வான் 5 பௌண்டரிகளுடன் 41 ரன்களும் எடுத்து விளையாடி வருகின்றனர். பாக். அணி வெற்றி பெற இன்னும் 60 பந்துகளில் 66 ரன்கள் தேவைப்படுகிறது.

  • பாக். அணி அதிரடி ரன் குவிப்பு:  

153 ரன்கள் வெற்றி இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கி விளையாடி வருகிறது. 6 ஓவர்களில் பவர் பிளே முடிவில் பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 55 ரன்கள் குவித்து விளையாடி வருகிறது. பாபர் அசாம் 4  பௌண்டரிகளுடன் 25 ரன்களும், ரிஸ்வான் 5 பௌண்டரிகளுடன் 28 ரன்களும் எடுத்து விளையாடி வருகின்றனர். பாக். அணி வெற்றி பெற 84 பந்துகளில் 98 ரன்கள் தேவைப்படுகிறது.

  • நியூசிலாந்து அணி 152 ரன்கள்:

நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 4விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் குவித்துள்ளது. அதிகபட்சமாக வில்லியம்சன் 46 ரன்களும், டேரில் மிட்சேல் 53 ரன்களும், கான்வே 21 ரன்களும், நீசம் 16 ரன்களும் குவித்துள்ளனர். பாக். அணி சார்பில் ஷாஹீன் அப்ரிடி 2 விக்கெட்களும், நவாஸ் 1 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர்.

  • 10 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 59 ரன்கள் குவித்துள்ளது. நவாஸ் வீசிய 8 ஆவது ஒவரின் முடிவில் கிளென் பிலிப்ஸ்(6) அவரிடமே கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். வில்லியம்சன் 23 ரன்களுடனும், மிட்சேல் 5 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.
  • நியூசிலாந்து அணி 6 ஒவர்களுக்கு, பவர் பிளே முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 38 ரன்கள் குவித்துள்ளது. கான்வே 3 பௌண்டரிகளுடன் 21ரன்களுடன் ரன் அவுட் ஆகியிருக்கிறார். வில்லியம்சன் 13 ரன்களுடனும் களத்தில் இருக்கிறார், ஷாஹீன் அப்ரிடி 2 ஓவர் வீசி 11 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தியிருக்கிறார்.
  • பாக்-நியூசிலாந்து மோதும் முதல் அரையிறுதியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, ஆட்டத்தின் முதல் ஒவேரிலேயே விக்கெட்டை பறிகொடுத்தது. ஷாஹீன் அப்ரிடி வீசிய முதல் ஒவரின் 3ஆவது பந்தில், பின் ஆலன் 4 ரன்னுக்கு லெக் பிபோர் முறையில், டிஆர்எஸ் எடுத்து அவுட் ஆனார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்