டி-20 உலகக்கோப்பையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது அரையிறுதியில் டாஸ் வென்று இங்கிலாந்து அணி பௌலிங்.
ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் டி-20 உலகக்கோப்பை தொடரின் இரண்டாவது அரையிறுதிப்போட்டி இன்று அடிலெய்டில் நடைபெறுகிறது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழைவதற்கு இன்று பலப்பரிட்சை நடத்துகின்றன.
அடிலெய்டில் கடந்த சில தினங்களாக மழை ஏதுமில்லை மற்றும் போட்டி நாளான இன்று லேசாக மழைப்பொழிவு இருக்கலாம் என்று வானிலை தெரிவிக்கிறது, மேலும் இந்த மைதானத்தில் கடைசியாக நடைபெற்ற 11 டி-20 போட்டிகளின் முடிவில் டாஸ் வென்ற அணி இதுவரை வென்றதில்லை என்ற சாதனை தொடர்ந்து வருகிறது. முதல் பேட்டிங் செய்யும் அணி 4 போட்டிகளில் வெற்றியும் 2இல் தோல்வியும் பெற்றிருக்கிறது.
டாஸ் வென்று இங்கிலாந்து அணி முதலில் பௌலிங் தேர்வு செய்துள்ளது, இரு அணிகளிலும் விளையாடும் வீரர்கள் விவரம் பின்வருமாறு,
இந்திய அணி: கேஎல் ராகுல், ரோஹித் சர்மா (C), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்த் (W), அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங்
இங்கிலாந்து அணி: ஜோஸ் பட்லர்(W,C), அலெக்ஸ் ஹேல்ஸ், பிலிப் சால்ட், பென் ஸ்டோக்ஸ், ஹாரி புரூக், லியாம் லிவிங்ஸ்டோன், மொயீன் அலி, சாம் கர்ரன், கிறிஸ் ஜோர்டான், கிறிஸ் வோக்ஸ், அடில் ரஷித்
சென்னை: நாளை (டிச.05) தாம்பரம் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான புதிய நடை மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெறுவதால், காலை 7…
சென்னை: அமலாக்கத்துறை சோதனையில் எந்த ஆவணமும் பறிமுதல் செய்யப்படவில்லை என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் காந்திநகர்…
சென்னை: அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தில் இப்போது தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள்…
சென்னை: இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள பிசாசு 2 திரைப்படம் எப்போது தான் வெளியாகும் என 2 ஆண்டுகளுக்கு மேல்…
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் கோட்டையூர் கிராமத்தில் செயல்பட்டுவந்த தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலையில் மருந்து கலக்கும் அறையில் எதிர்பாராதவிதமாக…
நார்வே: உலகின் நம்பர்.1 செஸ் வீரரும் ஐந்து முறை உலக சாம்பியனுமான மேக்னஸ் கார்ல்சன் தனது காதலியான 26 வயதான…